திருச்சியில் சிறுமியை கர்ப்பமாகிய சிறுவன்.
கன்டோன்மென்ட்மகளிர் போலீசார் விசாரணை.
திருச்சி கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில்
பிளஸ் 1 படித்து வருகிறார். இவருடைய தாய் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். சமீபத்தில் இவரது தந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜன. 12 ந் தேதி தாய்க்கு உதவுவதற்காக அவரது வீட்டில் இவரது உறவினரான 17 வயது சிறுவன் வந்து தங்கி உள்ளார். இதனால் அந்த 16 வயது சிறுமியிடம் நெருங்கி பழக சிறுவனுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. இதன் பின் சிறுமியை காதலிப்பதாக கூறி இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இது குறித்த வழக்கு குழந்தைகள் நலக் குழுவின் விசாரணைக்குப் பிறகு பதிவு செய்யப்பட்டு
கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

