திருச்சி சுப்பிரமணியபுரத்தில் இருசக்கர வாகனம் திருட்டு.
திருச்சி சுப்பிரமணியபுரம் புலவர் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 59). இவர் கடந்த 13 ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி உள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்துபோது தனது இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்த லட்சுமணன் கே.கே. நகர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கேகே நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதால் தங்களது வீட்டின் முன்பு நிறுத்தும் இரு சக்கர வாகனங்களை மிகுந்த பாதுகாப்புடன் பூட்டி வைக்குமாறு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

