கேஸ் தட்டுப்பாடு காரணமாக திருச்சியில் ஒட்டல்களில் டீ, காபி விலை உயர்ந்தது.கேஸ் தாராளமாக கிடைத்தாலும் விலை குறையுமா என்பது சந்தேகமே.
கேஸ் தட்டுப்பாடு காரணமாக திருச்சியில் ஒட்டல்களில் டீ, காபி விலை உயர்ந்தது.நிலைமை சரியான பிறகு குறையும் என வியாபாரிகள் கருத்து.குறையாது என்பது பொதுமக்கள் கருத்து.
இஸ்ரேல், அமெரிக்கா -ஈரான் போரை தொடர்ந்து நாடு முழுவதும் கடும் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு சிலிண்டர்கள் முன்பதிவு செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்பட்டு உள்ளது.இதனால் நாடு முழுவதும் ஹோட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன. திருச்சியில் சில ஹோட்டல்கள் மூடப்பட்டு உள்ளன.பல ஓட்டல்களில் விறகு அடுப்பு உபயோகப்படுத்திசமையல் செய்து ஓட்டலில் சாப்பாடு மற்றும் உணவு வகைகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் விறகு விலையும் திடீரென்று உயர்ந்து வருகிறது. இதனால் வியாபாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.இந்நிலையில் திருச்சியில் உள்ள சில ஓட்டல்களில் தற்காலிகமாக ? டீ, காபி மற்றும் உணவுகளின் விலை உயர்ந்து உள்ளது.அதன்படி கிளாஸ் டீ ரூ.15, வடை ரு.10, பஜ்ஜி ரூ. 8, கிளாஸ் காபி ரூ.18, இட்லி பூரி பொங்கல்,தோசை சப்பாத்தி ரோஸ்ட் விலையும் ரூ 5 உயர்ந்துள்ளது.
இந்த உயர்வு தற்காலிகமானது .எரிவாயு தட்டுப்பாடு நீங்கிய பிறகு மீண்டும் பழைய விலைக்கு டீ காபி மற்றும் உணவுகள் விற்கப்படும் என்று ஓட்டல் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்,ஆனால் வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்ற போது பத்து ரூபாய்க்கு விற்ற ஆம்லெட் ரூ.20 ஆக உயர்ந்தது.ஆனால் தற்போது வெங்காயம் கிலோ 10 ரூபாய்க்கு விற்றாலும் உயர்ந்த ஆம்லெட் விலை உயர்ந்தது தான்.
அதேபோன்றுதான் இப்பொழுது வியாபாரிகள் உயர்த்தியுள்ள விலை இறங்குமா என்பது சந்தேகம் தான் என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

