பக்கத்து வீட்டுக்காரருடன் உல்லாச உறவிலிருந்த பெண்ணிற்கு, கணவனே எமனான சம்பவம் .
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள பெரியகுளம் தெருவைச் சேர்ந்தவர் முத்துபாட்டன் என்கிற அஜித் (வயது 27) கொத்தனார் வேலை பார்த்து வந்த இவருக்கு சுதா என்ற மனைவியும், (திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகின்றது) ஆறு மற்றும் இரண்டு வயதில் இரு பெண் குழந்தைகளும் இருந்தனர்.
ஆரம்பத்தில் அன்பாக நகர்ந்த குடும்ப வாழ்க்கையில் சமீப மாதங்களாக பெரும் விரிசல் விழுந்தது. காரணம் மற்றொரு ஆணுடனான சுதாவின் தகாத உறவு. பக்கத்து இளைஞருடன் சுதாவிற்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கணவன் அஜித்திற்கு தெரியவர, அவர் மனைவியை கடுமையாகக் கண்டித்துள்ளார். பக்கத்து வீட்டுக்காரருடனான பழக்கத்தை கைவிட சொல்லி பலமுறை எச்சரித்துள்ளார். அதனால் கடந்த சில நாட்களாகவே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல வேலைக்குச் சென்ற அஜித் அன்று மாலை சீக்கிரமாகவே, வீடு திரும்பி உள்ளார். அப்போது மனைவி சுதா, பக்கத்து வீட்டில் இருந்து வெளியே வந்ததை அவர் பார்த்துள்ளார்.இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அஜித் மனைவியை அங்கே தாக்கியுள்ளார்.இருந்தும் கோபம் அடங்காத அஜித் வீட்டிற்குள் சென்று மனைவி வந்ததும், மறைத்து வைத்திருந்த அரிவாளை கையில் எடுத்து மனைவியின் தலையை துண்டாக வெட்டி எடுத்து வீட்டில் வாசலில் வைத்துள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சுதாவின் தலையை கண்டு அலறி அடித்து ஓட்டம் எடுத்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்து, சுதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை வெறியில் நின்றிருந்த அஜித்தை ரத்த காயங்களுடன் போலீசார் கைது செய்தனர். பலமுறை கண்டித்தும் தகாத உறவை கைவிட மறுத்ததால் தலையை எடுத்து விட்டேன் என போலீசில் அஜித் வாக்குமூலம் அளித்துள்ளார். நடுநடுங்க வைக்கும் இச்சம்பவம் நெல்லை அம்பாசமுத்திரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

