திருச்சியில் அமெரிக்கா இஸ்ரேலை கண்டித்தும், இருசக்கர வாகனம், கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து சி.பி.எம் கண்டன ஆர்ப்பாட்டம்.
அமெரிக்க டிரம்ப் அரசு ஈரான் மீதான தாக்குதல், இஸ்ரேல் அரசு லெபனான் மீதான தாக்குதல் நடத்தி 150 க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதையும், தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் அதிபர்களை கொலை செய்வதும், கடத்துவதுமான அமெரிக்க ஏகாதிபத்திய அராஜகத்தை கண்டிக்காத ஒன்றிய மோடி அரசை கண்டித்தும்
, ஈரான் நாட்டு மக்கள் தங்கள் விருப்பப்படி அரசு அமைத்துக் கொள்வதை தடுக்கக்கூடாது. பிற நாடுகளில் உள் விவகாரங்களில் தலையிடும் அத்துமீறலை உடனடியாக கைவிட வேண்டும், கடுமையான பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும். கேஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலக்கரை பகுதி குழு சார்பில்
விறகு அடுப்பு வைத்து, இரு சக்கர வாகனம் மற்றும் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து முக்காடு ஒப்பாரி வைத்து சங்கிலியாண்டபுரம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், பகுதி செயலாளர் சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் சீனிவாசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் பகுதிக்குழு உறுப்பினர்கள் கனல்கண்ணன். ரவிக்குமார், ராகிலா , ராஹிலா , பாண்டி, பொன்மகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பகுதிக்குழு உறுப்பினர் இரட்டைமலை நன்றி கூறினார்.

