திருச்சி ஸ்ரீ நற்பவி யோகாலயாவில் மகளிர் தின விழா .
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி, வயலூர் ரோடு, சீனிவாசநகர், 5வது மெயின்ரோடு, 2வது குறுக்கு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ நற்பவி யோகாலயாவில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
பி.ஆர்.ஜெயஶ்ரீ வரவேற்புரையாற்றி, நிகழ்ச்சியினை வெகு சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு ஜென்னிஸ் உடற்கல்வி கல்லூரியின் முதல்வர் டாக்டர். அருள்மொழி சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு,
குத்துவிளக்கு ஏற்றி, யோகா பற்றியும, அதனை தினமும் பயிற்சி செய்வதால் ஏற்படும் பயன்கள் பற்றியும் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டனர்.
ஸ்ரீ நற்பவி யோகாலயாவின் நிர்வாக இயக்குனர் சேவை ரத்னா பெ.பூமிகா அவர்கள், யோகாசன பயிற்சியும், தியான பயிற்சியும், வெகு சிறப்பான முறையில் அவர்களுக்கு பயிற்சி தந்தார்.
ஶ்ரீ நற்பவி யோகாலயாவில் ,
யோகா பயிலும் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பான முறையில் ஆசனங்களை செய்தனர்.
ஏ.ஆர்.பிரதிஷா மகளிர் தினத்தை பற்றி சிறப்புரை வழங்கினார்.
யோகா வகுப்பில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ அனுதினமும்
யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் ,
ஶ்ரீ நற்பவி யோகாலயாவின் உரிமையாளர் யோகா ஆசிரியர் கலைமாமணி சேவை ரத்னா மு.பரமேஸ்வரன் அவர்கள் சிறப்பான முறையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருந்தார்.
ஸ்ரீ நற்பவி யோகாலயா ஒருங்கிணைப்பாளர் யோகா ஆசிரியர் கலைமாமணி சேவை ரத்னா சித்ரா பெருமாள் அவர்கள் நன்றி கூறினார்.

