Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பிரதமர் வருகையொட்டி திருச்சியில் நாளை போக்குவரத்து மாற்றம் முழு விபரம்.

0

'- Advertisement -

பிரதமர் வருகையொட்டி திருச்சியில் நாளை போக்குவரத்து மாற்றம்.

திருச்சி பஞ்சப்பூரில் நாளை மாலை பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக   கூட்டணி பொதுக்கூட்டம் மற்றும் மத்திய அரசு விழா நடைபெறுகிறது. இதில் அதிமுக பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள உள்ளனர்.

இதனால் திருச்சி மாநகருக்குள் வந்து செல்லும் நகரப் பேருந்துகள் மற்றும் வெளியூர் பேருந்துகள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது.

சென்னை, பெரம்பலூர், சேலம் மார்க்கத்திலிருந்து வரும் பேருந்துகள், நகர மற்றும் புறநகர் பேருந்துகளும் மன்னார்புரத்தில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கீழே இறங்கி, சர்வீஸ் சாலை வழியாக இடதுபுறம் திரும்பி கே.கே.நகர், எல்ஐசி காலனி, உழவர் சந்தை, சாத்தனூர் குளம் வழியாகச் சென்று, வலதுபுறம் திரும்பி செட்டியப்பட்டி குடிநீர் தொட்டி வழியாக பஞ்சப்பூர் பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.

மதுரை மார்க்கத்திலிருந்து வரும் பேருந்துகள்: பஞ்சப்பூர் சந்திப்பு வரை வந்து, அங்கிருந்து வலது பக்க சாலையில் திரும்பி, எதிர் திசையில் பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக வர வேண்டும்.

பஞ்சப்பூரிலிருந்து மதுரை செல்லும் பேருந்துகள்: வழக்கமான பாதையில் வெளியே செல்ல வேண்டும்.

கரூர், கோயம்புத்தூர், சேலம், சென்னை செல்லும் பேருந்துகள்: பேருந்து நிலையத்தின் பின்புறமாக வெளியே வந்து செட்டியப்பட்டி, சாத்தனூர்குளம் வழியாக ஓலையூர் சந்திப்பு சென்று, அங்கிருந்து கே.கே. நகர் வழியாக வயர்லெஸ் சாலையை அடைந்து, டிவிஎஸ் டோல்கேட் வழியாக வெளியே செல்ல வேண்டும்.

சூழ்நிலை மற்றும் வாகன நெரிசலைப் பொறுத்து போக்குவரத்து வழித்தடங்களில் மாற்றங்கள் செய்யப்படலாம். மாநகரைக் கடந்து செல்லும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் செல்ல வேண்டிய மாற்றுப் பாதையில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி வெளியிட்டுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.