Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்திய அணிக்கு ராசியில்லாத ஞாயிற்றுக்கிழமை பைனல் என்பதை உடைத்து எறிவார்களா இந்திய வீரர்கள்.

0

'- Advertisement -

இந்தியா – நியூசிலாந்து (IND vs NZ) இடையிலான 2026 டி20 உலகக் கோப்பை(2026 T20 World Cup) இறுதிப்போட்டி நாளை அதாவது 2026 மார்ச் 8ம் தேதி (ஞாயிற்று கிழமை) நடைபெறுகிறது.

இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடப்பது ஒரு புறம் இந்திய ரசிகர்களுக்கு பயத்தை கொடுக்கிறது. காரணம் இங்குதான் இந்திய அணி கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது. அதேநேரத்தில், புள்ளி விவரங்களில் அடிப்படையில் இந்திய அணிக்கு இறுதிப்போட்டி என்று வந்தாலே ஞாயிற்றுக்கிழமை ராசியில்லாத நாளாகவே உள்ளது. அதாவது, இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை நடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இதுவரை வென்றதில்லை என்ற வரலாற்றை கொண்டுள்ளது. இது ஒரு வகையான மூடநம்பிக்கை என்றாலும், புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இது உண்மையே. இதனை பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்வோம்.

இந்திய அணிக்கு ராசியில்லாத ஞாயிற்றுக்கிழமை:

2003 ஒருநாள் உலகக் கோப்பை பைனல் – இந்தியா vs ஆஸ்திரேலியா (மார்ச் 23, ஞாயிற்றுக்கிழமை) – இந்திய அணி தோல்வி

2023 ஒருநாள் உலகக் கோப்பை பைனல் – இந்தியா vs ஆஸ்திரேலியா (நவம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை) – இந்திய அணி தோல்வி

2014 டி 20 உலகக் கோப்பை பைனல் – இந்தியா vs இலங்கை (ஏப்ரல் 6, ஞாயிற்றுக்கிழமை) – இந்திய அணி தோல்வி.

 

இந்திய அணிக்கு ராசியான நாள் எது..?

இந்திய அணி பெரும்பாலும் உலகக் கோப்பையை வென்ற போதெல்லாம், அது சனிக்கிழமையாகவே இருந்துள்ளது. அதற்கான புள்ளி விவரங்களும் பின்வருமாறு..

1983 ஒருநாள் உலகக் கோப்பை: (ஜூன் 25 – சனிக்கிழமை) லார்ட்ஸில் இந்தியா தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது.

2011 ஒருநாள் உலகக் கோப்பை: (ஏப்ரல் 2, சனிக்கிழமை) வான்கடேயில் தோனியின் வரலாற்றுச் சிறப்புமிக்க சிக்ஸர் வெற்றி பெற்றது.

2024 டி20 உலகக் கோப்பை: (ஜூன் 29, சனிக்கிழமை) பார்படோஸில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது.

2007 டி20 உலகக் கோப்பை: (செப்டம்பர் 24, திங்கட்கிழமை) பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது.

இதுபோன்ற மூடநம்பிக்கை ஒருபுறம் இருந்தாலும் டி20 போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக உள்ளது.எனவே இந்த முறை மூடநம்பிக்கையை உடைத்து எரிந்து வெற்றிக் கோப்பையை முத்தமிடும் என்ற நம்பிக்கையில் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.