Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிஆர் இ யூ பொன்மலை பணிமனை கோட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

0

'- Advertisement -

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிஆர் இ யூ பொன்மலை பணிமனை கோட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கடந்த மாத ரயில்வே அலவன்ஸ், ஓவர் டைம் அலவன்ஸ், நைட் டூட்டி அலவன்ஸ், டிராவல் அலவன்ஸ் போன்றவற்றை வழங்காத ரயில்வே நிர்வாகம் மற்றும் மத்திய அரசை கண்டித்தும் இன்டர் டிவிஷன் டிரான்ஸ்பர், இண்டர் ரயில்வே டிரான்ஸ்பர் ஆகியவற்றிற்கு பதிவு செய்தவர்களில் என். ஓ.சி பெற்றவர்களை சீனியர் அடிப்படையில் உடனடியாக விடுவிக்க வேண்டும் . புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பொன்மலை பணிமனையில் பயோ மெட்ரிக் அட்டனன்சை

வேலை வரும் போதும் வேலை முடிந்து செல்லும்போதும் என இரண்டு வேளை மட்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். வேலை பளுவிற்கு தகுந்தாற் போல் ஓவர் டைம் வழங்க வேண்டும். ரயில்வேயில் தனியார் மயத்தை கைவிட வேண்டும் 8வது ஊதியக்குழு பணிகளை விரைவு படுத்தி 50 சதவிகிதம் டிஏவை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிஆர் இ யூ பொன்மலை பணிமனை

கோட்டம் சார்பில் நேற்று வெள்ளியன்று பொன்மலை ஆர்மரி கேட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பணிமனை கோட்டத் தலைவர் லெனின் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் உதவி பொதுச்செயலாளர்கள் சந்தான செல்வம்,  ராஜா, உதவி கோட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.