Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் சனிப்பெயர்ச்சி பரிகார ஹோமம் சிறப்பாக நடைபெற்றது.

0

'- Advertisement -

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் சனிப்பெயர்ச்சி பரிகார ஹோமம் சிறப்பாக நடைபெற்றது.

ஏராளமான பக்தர்கள் இன்று சாமி தரிசனம்.

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் இன்று வெள்ளிக்கிழமை ( 6-ந் தேதி) சனி பெயர்ச்சி பரிகார ஹோம விழா சிறப்பாக நடைபெற்றது.

இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று காலை 8.24 மணிக்கு சனிபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசித்தார். இதனை முன்னிட்டு திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் சனி பெயர்ச்சி பரிகார ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதை முன்னிட்டு மேஷம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் போன்ற ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொண்டனர்.

இதை முன்னிட்டு இன்று ( 6-ந் தேதி) காலை 7:00 மணி முதல் 8 மணி வரை கணபதி ஹோமம், சனி பரிகார ஹோமம், ஆஞ்சநேயர் காயத்ரி ஹோமம், பூர்ணா ஹூதி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து 8.24 மணிக்கு நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த பரிகார ஹோம விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் வினோத்குமார், செயல் அலுவலர் சரண்யா, அர்ச்சகர் கோகுல் ஆகியோர் முன்னின்று சிறப்பாக செய்து இருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.