Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி திமுக மாநில மாநாட்டில் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார்.மாநாட்டுப் பணிகளை பார்வையிட்ட பின் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.

0

'- Advertisement -

200 ஏக்கரில் 10 லட்சம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள். திருச்சி திமுக மாநில மாநாட்டில் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார் மாநாட்டுப் பணிகளை பார்வையிட்ட பின் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.

திருச்சி சிறுகனூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் திமுக 12 வது மாநில மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தும் வகையில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ‘ஸ்டாலின் தொடரட்டும்- தமிழ்நாடு வெல்லட்டும்’ என்கிற தலைப்பில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் மார்ச் 9-ந் தேதி திமுக 12 வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. 2021-ம் ஆண்டு மாநாடு நடத்திய அதே இடத்திலேயே தற்போதும் மாநாடு நடைபெறுகிறது. திறந்தவெளி மாநாடாக நடைபெறும் இங்கு, தொண்டர்கள் அமர்வதற்கு 200 ஏக்கர் இடமும், 25 ஆயிரம் வாகனங்கள் நிறுத்துமிடத்துக்கு இடமும் தயார் செய்யப்பட்டு வருகிறது. தற்போது தொண்டர்கள் அமரும் பகுதி முழுவதும் இளஞ்சிவப்பு நிறத்தில் தரை விரிப்புகள் விரிக்கப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கும் நிலையில், மொத்தம் 5 லட்சம் நாற்காலிகள் திடலில் போடப்பட உள்ளன. அமைச்சர் கே.என்.நேரு, கடந்த சில நாட்களாக மாநாடு நடக்கும் இடத்தில் முகாமிட்டு,பம்பரமாக சுழன்று பணிகளை விரைவுபடுத்தி வருகிறார்.

மார்ச் 9-ந் தேதி மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சிக் கொடியை ஏற்றி வைக்கிறார். அதன்பிறகு மாநாட்டு நிகழ்வுகள் தொடங்குகின்றன. கொடியை ஏற்றி வைத்த பிறகு மாநாட்டு மேடையின் பின்புறம் உள்ள தனியார் தொழிற்பூங்காவில் முதல்வர் ஓய்வெடுக்கிறார். மாநாட்டில் திரைப்பட இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.

அதன்பிறகு, மாலையில் மாநாட்டுத் திடலுக்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மேடையின் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள அரை கி.மீ. நீள ‘ரேம்ப்’பில் தொண்டர்கள் மத்தியில் நடந்து வருகிறார். திமுகவின் முன்னணி நிர்வாகிகள் பேசி முடித்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

இந்த மாநாட்டில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்களா என்று உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் அமைச்சர் கே.என்.நேரு இன்று மாநாட்டுப் பணிகளை நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியில் வரும் 9 தேதி தமிழ்நாடு வெல்லட்டும் ஸ்டாலின் பயணம் தொடரட்டும் என்ற மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது..

இந்த மாபெரும் மாநாட்டில் 10 லட்சம் நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

மாநாட்டிற்கு வரக்கூடிய அனைவருக்கும் கழிவறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் தேவையான அளவிற்கு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டிற்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களும் நிறுத்துவதற்காக பிரத்தியகமாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாடு திராவிட கழகத்திற்கு திருப்பு முனையாக அமையும்.

இந்த மாநாடு முழுக்க முழுக்க திமுகவின் மாநாடு.

மாநாட்டிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் வருகை தருவதால் போக்குவரத்து சீரமைப்பு மற்றும் மாற்றம் செய்வதற்கு காவல்துறையினர் உரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

மார்ச் 9-ந் தேதி மதியம் தேதி மதியம் 3 மணிக்கு கலை நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்க உள்ளது. 5:30 மணிக்கு தமிழக முதல்வர் , திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் கழக கொடியேற்றி மாநாட்டை தொடக்கி வைக்க உள்ளார்.

கடந்த தேர்தலின் போது இதே இடத்தில் மகளிர் உரிமைத்தொகை போன்ற 7 வாக்குறுதிகளை அறிவித்தார். அது மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அதே போன்று இந்த மாநாட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கின்றோம். ஏற்கனவே அறிவித்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றி இருக்கிறோம் என்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள் .அதேபோன்று புதிய அறிவிப்புகளோடு சிறந்த மாநாடாக இது அமையும்

தேர்தல் அறிக்கையில் இருந்து ஏதாவது ஒன்று, இரண்டு அறிவிப்புகளை இங்கு வெளியிடலாம்.

நிதிநிலைக்கு ஏற்ப என்ன செய்ய முடியுமோ அறிவித்துவிட்டு செய்யாமல் இருந்தால் சரியாக இருக்காது .

எதை செய்ய முடியுமோ அதை முதலமைச்சர் அறிவிப்பார்.

இது திமுக மாநாட்டில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பது குறித்து முதல்வர் முடிவு செய்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு மாநாட்டு பணிகளை பார்வையிட்டு,நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவுரைகளை வழங்கினார்.

 

இந்நிகழ்வில்

மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்,

மாநகரச் செயலாளர் மாநகராட்சி மேயர் அன்பழகன்,ஸ்டாலின் குமார் எம். எல்.ஏ,

மத்திய மாவட்ட துணை செயலாளர் முத்து செல்வம்,மத்திய மாவட்டம் முன்னாள் துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர்,பொருளாளர் துரைராஜ்,மாணவரணி இன்ஜினியர் ஆனந்த்,

ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல்,

சித்ரா ஹோட்டல் பாரி வள்ளல்,

,பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ்,காஜாமலை விஜய்,நாகராஜன்,கமால் முஸ்தபா,ராம்குமார்,வக்கீல் இளங்கோ,மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது,வர்த்தகர் அணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம்,மத்திய மாவட்ட வர்த்தகர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் தொழிலதிபர் ஜான்சன் குமார்,முன்னாள் பகுதி செயலாளர் தில்லை நகர் கண்ணன்,பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ்,திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி,மாநகரத் துணைச் செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி,மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் கலந்தர் பஷீர்,

மாவட்ட பிரதிநிதிகள் வக்கீல் மணிவண்ண பாரதி, சோழன் சம்பத்,கவுன்சிலர்கள் விஜயா ஜெயராஜ்,புஷ்பராஜ்,ராமதாஸ்,மஞ்சுளா பாலசுப்பிரமணியன்,வட்டச் செயலாளர்கள் புத்தூர் பவுல்ராஜ்,வாமடம் சுரேஷ், பி.ஆர்.பி. பாலசுப்பிரமணியன்,மார்சிங் பேட்டை செல்வராஜ்,தனசேகர்,நிர்வாகிகள் இன்ஜினியர் நித்தியானந்தம்,பந்தல் ராமு,பிராட்டியூர் மணிவேல்,

சர்ச்சில்,ரஜினி கிங்,அபூர்வா மணி,எம்.ஆர் எஸ்.குமார்,சிந்தாமணி பாலமுருகன்,ஸ்ரீரங்கம் எம்.எஸ், மணி உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.