மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான திருச்சி துப்பாக்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்.
மத்திய பாதுகாப்பு படை,மாவட்ட போலீசார் அதிரடி சோதனை.
திருச்சியில் மத்திய பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான திருச்சி எச்.ஏ.பி.பி.,தொழிற்சாலை (துப்பாக்கி தொழிற்சாலை) உள்ளது.இங்கு ஏராளமான ஊழியர்கள், தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலைக்கு மின்னஞ்சல் மூலமாக இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது.இதையடுத்து ஊழியர்கள், தொழிலாளர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் மாவட்ட போலீசார் இணைந்து தொழிற்சாலை மற்றும் தொழிற்சாலை வளாகத்தில் வெடிகுண்டு கண்டறியும் சோதனை நடத்தினர்.தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இந்த சம்பவத்தால் துப்பாக்கி தொழிற்சாலை பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

