முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற போது விபத்து:
இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்ததில் வாலிபர் பலி
திருச்சி தெற்கு போக்குவரத்து காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருச்சி உயக்கொண்டான் திருமலை இரட்டை வாய்க்கால் மேற்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் ராகவன் (வயது 19 ) இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம். (வயது 17 ) இவர்கள் இரண்டு பேரும் இருசக்கர வாகனத்தில் கன்டோன்மென்ட் மேஜர் சரவணன் சாலை அருகே சென்று கொண்டிருந்தனர் .அப்போது மற்றொரு வாகனத்தை முந்த முயன்ற போது நிலை தடுமாறி இருவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர். இதில் ஸ்ரீராம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.அப்போது அங்கிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு ஸ்ரீராம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து தெற்குப் போக்குவரத்துக் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

