திருச்சியில் மருத்துவர் சமூக நலச் சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாவட்ட மாநகர மருத்துவர் சமூக நல சங்கம் , வாசன் கண் மருத்துவமனை உடன் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் தில்லை நகரில் உள்ள வாசன் கண் மருத்துவமனையில் நடைபெற்றது.
மாநகர செயலாளர் சேகர் என்கிற தர்மலிங்கம் தலைமை தாங்கினார்.மருத்துவர் சமூக நல சங்கத்தின் துணைத் தலைவர் கோபி முன்னிலை வகித்தார்.மாநகர துணைச் செயலாளர் G.மதியழகன்
குத்து விளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாநகர சங்க ஆலோசகர் திருவை குமரன் சிறப்புரையாற்றினார்.
இதில் மருத்துவர் சமூக நலச் சங்க நிர்வாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாநகர துணை நிர்வாகிகள்
அவைத் தலைவர் தர்மலிங்கம்,ரங்கராஜ், சுரேஷ்,அசோக் ஸ்டைல்,சரவணகுமார், கோர்ட் சுப்பிரமணி, பாலகிருஷ்ணன், இளையராஜா, மகாலிங்கம் மற்றும் பலர் நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்து இருந்தனர்.
முடிவில் பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.

