Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கோட்ட துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

0

'- Advertisement -

திருச்சி கோட்டம் பணிமனை கோட்டம் பொன்மலை இன்று புதன்கிழமை (04.03.2026) மதிய உணவு இடைவேளையில்ஆர்மரி கேட் முன்புறம் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் திருச்சி கோட்ட துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இரவு, பகல், மழை, வெயில், குளிரென்று பாராமல் 24×7 பணிபுரியும் Á TA, NDA, OTA, RISK & HARDSHIP, KMA, SPL.GATE KEEPER ALLOWANCE, CONTROLLER ALLOWANCE ALLOWANCE களையும் நிர்வாகத்தின் குளறுபடியால் நிறுத்தி வைத்தது எந்த வகையில் நியாயம்?

Night duty Allowance ஐ நிறுத்தி வைத்த நிர்வாகமே? தொழிலாளர்களை Night duty பணிபுரிய சொல்ல உனக்கு என்ன தார்மீக உரிமை உள்ளது!

TA வழங்காத கையாலாகாத நிர்வாகமே? தொழிலாளர்களை HQ ஐ விட்டு வெளி வேலைக்கு அனுப்பாமல் இருக்க தயாரா?

RISK & HARDSHIP ALLOWANCE D SPL.GATE KEEPER ALLOWANCE

வழங்காமல் நிதி நெறுக்கடி என தொழிலாளியிடம் கூறும் நிர்வாகமே? LC யில் விபத்து ஏற்பட்டாலோ அல்லது பாதுகாப்பு விதி மீறல் ஏற்பட்டாலோ தொழிலாளர்களுக்கு CHARGE SHEET வழங்காமல் இருப்பாயா?

KM ALLOWANCE ஐ வழங்க இயலாது என சொல்லும் நிர்வாகமே? ஓடும் தொழிலாளர்களின் உயிருக்கும், பயணிகள் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் தர முடியுமா?

OT ALLOWANCE ! OUTERN TARGET குறைத்துக்கொள்ள முன்வருமா?

ABSS (AMRITH BHARATH) நிர்வாகமே! தொழிலாளர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய ALLOWANCE களை மட்டும் நிறுத்துவதின் மர்மம் என்ன?

ஆள்பற்றாக்குறை, வேலை பளு, உதிரி பாகங்கள் இல்லாத அவல நிலைமை மற்றும் அடிப்படை வசதிகளை கூட செய்து தர முடியாத நிர்வாகமே! தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் விதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து ALLOWANCE களையும் போர்கால அடிப்படையில் உடனடியாக வழங்கக் கோரி

தொழிலாள சகோதர, சகோதரிகளே நமக்கு கிடைக்க வேண்டிய ALLOWANCE களை வழங்காத நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே பணிமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.