சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் சிலைக்கு தமிழ்நாடு பார்க்கவ குல முன்னேற்ற சங்கம், ஜ.ஜே.கே நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை.
நீதிக் கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் சிலைக்கு தமிழ்நாடு பார்க்கவ குல முன்னேற்ற சங்கம், ஜ.ஜே.கே நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை.
நீதிக் கட்சியின் வைரத்தூண் என்று அழைக்கப்படும் சர்.ஏ.டி.பன்னீர்செல்வத்தின் 86வது நினைவு தினத்தை முன்னிட்டு, திருச்சியில் உள்ள மணிமண்டபத்தில், சர்.ஏ.டி.பன்னீர்செல்வத்தின் முழுவுருவசிலைக்கு, இந்திய ஜனநாயக கட்சியினரும், தமிழ்நாடு பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தினரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மத்திய மண்டல தலைவர் வெங்கடேசன் தலைமையில் மாநில பொதுச் செயலாளர்
கதிர்கணேசன், மாநில இணை பொது செயலாளர் அன்பு துரை, மாநில பொருளாளர் செந்தில்குமார், மாநிலத் துணைத் தலைவர் தங்கராசு,மாநில விளம்பரச் செயலாளர் இ கே ராமசாமி,மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கவியரசன்,மாநில இளைஞரணி இணைச் செயலாளர் வெற்றிச்செல்வன்மாவட்ட வழக்கறி அணி செயலாளர் சத்தியமூர்த்தி திருச்சி மாவட்ட தலைவர்கள் ஜெயச்சந்திரன் செல்வக்குமார் சேகரன் சுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகளும் ஐஜேகே திருச்சி மாநகர மாவட்ட பொறுப்பாளர் மேலப்புதூர் குணா,மேற்கு மாவட்ட பொறுப்பாளர் ராபர்ட் கிறிஸ்டி,நிர்வாகிகள் சதீஷ்குமார், மதியழகன் ஆகியோரும் மதி, முருகன் மகளிர் அணி மாநில பொறுப்பாளர்கள் சாந்தி ,சாந்தா ,தமிழரசி ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருச்சி மாநகர் மாவட்ட மாவட்ட பொறுப்பாளர்மேலப்புதூர் குணா,மேற்கு மாவட்ட பொறுப்பாளர் ராபர்ட் கிறிஸ்ட்யி ஆகியோர் திருச்சி பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகில் நீதி கட்சியின் வைரத் தூண் சர்.ஏ.டி. பன்னீர் செல்வத்தின் சிலையை நிறுவ வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

