திருச்சி கல்லுக்குழி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான அருள்மிகு ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

நாம் இங்கு சென்று வணங்கினால் செல்வம், கல்வி பூரண உடல்நலம் கண்டிப்பாக கிடைக்கும்.
தற்போது வருகின்ற மார்ச் மாதம் ஆறாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வாக்கிய பஞ்சாங்கப்படி காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார்.இதனை முன்னிட்டு திருக்கோயிலில் சனிப்பெயர்ச்சி பரிகார ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.
பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் :
மேஷம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் மேற்கண்ட ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்வது உத்தமம்.
வெள்ளிக்கிழமை காலை 7மணி முதல் 8 மணி வரை கணபதி பூஜை ஹோமம், சனிபரிகார ஹோமம், ஆஞ்சநேயர் காயத்ரி ஹோமம், பூர்ணாஹீதி தொடர்ந்து காலை 8 24 மணிக்கு நவக்கிரங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மகா தீபாரதனை செய்து பிரசாதம் வழங்கப்படும்.
மேலும் சனிப்பெயர்ச்சி பரிகார ஹோமத்தில் கலந்து கொள்ள விரும்புவர்கள் தங்களது பெயர், நட்சத்திரம், 
என கோயில் செயல் அலுவலர் சரண்யா, நிர்வாக அறங்காவலர்கள் கோகுல்,வாசு,தக்கர் வினோத்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

