திருச்சி மேலஅம்பிகாபுரத்தில் திருமணமான 8வது மாதமே மனைவி பிரிந்து சென்ற விரட்டியில் கார் டிரைவர் தற்கொலை
திருச்சி மேலஅம்பிகாபுரத்தில் திருமணமான 8வது மாதமே மனைவி பிரிந்து சென்ற விரட்டியில் கார் டிரைவர் தற்கொலை .

திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் இந்திராகாந்தி தெருவை சேர்ந்தவர் இளங்கோ. இவரது இளைய மகன் நந்தா (வயது 26). கார் டிரைவரான இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்று உள்ளது. இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து நந்தா தனது மனைவியை அழைக்க தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் மனைவி உடன் வர மறுத்துள்ளார்.
இதனால் மன விரக்த்தியில் இருந்த நந்தா 26- ம் தேதி இரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

