திருச்சி எடமலைப்பட்டி புதூரில் நள்ளிரவில் வீடு புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகைகள் திருட்டு. மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்.
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் நள்ளிரவில் வீடு புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகைகள் திருட்டு.மர்ம நபர்கதிருச்சி எடமலைப்பட்டி புதூரில் நள்ளிரவில்
திருச்சி எடமலைப்பட்டி புதூர் படுகை பகுதியைச் சேர்ந்தவர் லூர்துசாமி (வயது 56). இவருடன் அவரது மாமியார் இன்குருதையம்மாள் (வயது 86) வசித்து வருகிறார்.
இவர்கள் வீட்டில் இரவு உறங்கிக் கொண்டிருந்தனர் .அப்போது அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து
உறங்கிக் கொண்டிருந்த வேளையில் இன்குருதையம்மாள் கழுத்தில் அணிந்து இருந்த 9 தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பிச்செல்ல முயன்றனர் .அப்போது சுதாரித்துக் கொண்ட
இன்குருதையம்மாள் சத்தம் போட்டார் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அனைவரும் உடனடியாக எழுந்து வந்து பார்த்தபோது அந்த மர்ம நபர்கள் அவரை தாக்கி விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.
திருடு போன தங்க செயின் மதிப்பு 9 பவுன் என்பதும் தெரிய வந்ததது.இது குறித்து புகாரின் பேரில் எடைமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ள் தப்பி ஓட்டம்,

