லால்குடி நீதிமன்றத்திற்கு இடம் கேட்டு வழக்கறிஞர்கள் பேரணியாக சென்று கலெக்டரிடம் மனு.
திருச்சி வழக்கறிஞர்கள் சங்க அவசர பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி திருச்சி வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம், லால்குடி, மணப்பாறை, முசிறி, தொட்டியம், துறையூர் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் லால்குடி நீதிமன்றத்திற்கு இடம் கேட்டு நேற்று திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இன்று இரண்டாவது நாளாக ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில்நீதிமன்றம் முன்பிருந்து, மேஜர் சரவணன் ஸ்தூபி வழியாக திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு பேரணியாக அனைவரும் நடந்து சென்றனர்.
பின்னர் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.பேரணிக்கு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எஸ்.பி.கணேசன், செயலாளர் சி.முத்துமாரி ஆகியோர் தலைமை தாங்கினர்.
திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர் பி.வி. வெங்கட் , திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் வடிவேல் ,பொருளாளர் சதீஷ்குமார் , இணை செயலாளர் விக்னேஷ் குற்றவியல் வழக்கறிஞர் சங்க துணை தலைவர்கள் வரகனேரி சசிகுமார், இரா.பிரபு, பொருளாளர் கிஷோர்,விஜய் நாகராஜன் , பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திர குமார்,நகர வழக்கறிஞர் சங்க பொருளாளர் சுதர்சன், ஜாக் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், மூத்த வழக்கறிஞர் மார்ட்டின், கங்கைச் செல்வன்,லால்குடி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆச்சியப்பன் ,செயலாளர் சேவியர், மணப்பாறை சங்க தலைவர் செங்குட்டுவன், செயலாளர் மகேந்திரன்.முசிறி வழக்கறி சங்க தலைவர் மருதையா ,செயலாளர் சுகுமார் தொட்டியம் சங்கத் தலைவர் பெரியசாமி, துறையூர் சங்க தலைவர் கார்த்திகேயன், செயலாளர் ரபீக , முன்னாள் துணைத் தலைவர் மதியழகன்,
முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன்,வழக்கறிஞர்கள் பொன் முருகேசன், நியூமேன்,அன்பில் காமராஜ்,சேது மாதவன்,எழிலரசி ,அஸ்வின் ராஜா, செல்வராஜ் மற்றும் திரளான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

