
திருச்சியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்.லால்குடி நீதிமன்றத்துக்கு இடம் வழங்க கோரிக்கை.
நாளை கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி.
திருச்சி வழக்கறிஞர்கள் சங்க அவசர பொதுக்குழுக் கூட்டம் திருச்சி நீதிமன்றத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தலைவர் எஸ்.பி.கணேசன் செயலாளர் சி.முத்துமாரி தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில்
‘லால்குடி வழக்கறிஞர் சங்கத்தில் இருந்து கொடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று பிப்.24, பிப்.25 ஆகிய 2 நாட்கள் நீதிமன்ற பணியிலிருந்து விலகியிருப்பது.
இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்ற நுழைவாயில் முன்பாக ஒருங்கிணைந்த நீதிமன்ற திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது. நாளை (பிப்.25ம் தேதி) திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று லால்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையான நீதிமன்ற கட்டிடத்துக்கு இடம் வழங்குவது தொடர்பாக கோரிக்கை மனு அளிப்பது’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி லால்குடி நீதிமன்றத்திற்கு இடம் வழங்க கோரி நீதிமன்றம் முன்பு திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கம் , திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம்,
லால்குடி, மணப்பாறை, முசிறிவழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் இன்று திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எஸ்.பி.கணேசன்,செயலாளர் சி.முத்துமாரி ஆகியோர் தலைமையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர் பி.வி.வெங்கட் , திருச்சிராப்பள்ளி
வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் வடிவேல் ,பொருளாளர் சதீஷ்குமார் , இணை செயலாளர் விக்னேஷ்
குற்றவியல் வழக்கறிஞர் சங்க துணை தலைவர்கள் வரகனேரி சசிகுமார், பிரபு பொருளாளர் கிஷோர்குமார். விஜய் நாகராஜன் நகர வழக்கறிஞர் சங்க பொருளாளர் சுதர்சன், ஜாக் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், முன்னாள் செயலாளர் சுகுமார்,
மூத்த வழக்கறிஞர் மார்ட்டின் லால்குடி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆச்சியப்பன், ,.செயலாளர் சேவியர், மணப்பாறை சங்க தலைவர் செங்குட்டுவன், செயலாளர் மகேந்திரன்.முசிறி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மருதையா ,செயலாளர் சுகுமார், தொட்டியம் சங்கத் தலைவர் பெரியசாமி துறையூர் சங்க தலைவர் கார்த்திகேயன், செயலாளர் ரபீக் முன்னாள் துணைத் தலைவர் மதியழகன், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன்,வழக்கறிஞர்கள் பொன் முருகேசன், நியூமேன்,அன்பில் காமராஜ்,சரவணசுந்தர்,
சேது மாதவன்,கௌசல்யா, லால்குடி மாரிமுத்து,எழிலரசி , அஸ்வின் ராஜா,தீன தயாளன், ஐ.செல்வராஜ்.
மற்றும் திரளான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

