திருச்சியில் மாடியில் பட்டம் விட்ட பள்ளி மாணவன் தவறி விழுந்து பரிதாப பலி.
திருச்சியில் மாடியில் பட்டம் விட்ட சிறுவன் தவறி விழுந்து பலியான பரிதாப சம்பவம் குறித்த விபரம்.
திருச்சி ஆழ்வார் தோப்பை சேர்ந்தவர் ஆட்டோ ரியாஸ். ஆட்டோ டிரைவர் இவரது மூத்த மகன் ராசிக் (வயது 14). இந்த சிறுவன் நண்பர்களுடன் சேர்ந்து மாடியில் பட்டம் விட்டுக் கொண்டிருந்தான். அப்போது பட்டம் பறக்காமல் சிக்கிக்கொண்டது. அப்போது ராசிக் எட்டி பட்டத்தை பிடிக்க முயன்ற போது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தான். இதில் அவனது
தலையில் பலத்த அடிப்பட்டுபரிதாபமாக இறந்து விட்டான். இந்த சம்பவம் குறித்து தில்லை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

