Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிட அவரின் தீவிர உயிர்,முதல் ரசிகர் மன்றம் தலைவர் ஆர்.கே .ராஜா விருப்ப மனு .

0

'- Advertisement -

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்க தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.

மேலும் அனைத்து தொகுதியிலும் போட்டியிட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம்விருப்ப மனு வாங்கி வருகிறார்.

இந்நிலையில் எஸ்.ஏ .சந்திரசேகர் மூலம் 2, 3 படங்கள் நடித்து விஜய் நடிகராக பிரபலம் ஆவதற்கு முன்பே விஜய்க்காக முதல் முதலில் ரசிகர் மன்றம் தொடங்கியவர் திருச்சி.ஆர் .கே . ராஜா தான் என்பது அனைவரும் அறிந்ததே.தற்போது இவர் தமிழக வெற்றி கழகத்தின் சாதாரண தொண்டன் தான் என்றாலும் தொடர்ந்து விஜய், டைரக்டர் எஸ்.ஏ . சந்திரசேகர் ஆகியோர் பிறந்த நாட்களில் முதியோர் இல்லங்களில் அன்னதானம் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்ந்து வழங்கி வருபவர் தான் ஆர்.கே.ராஜா.

தற்போது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட ரூ.பத்தாயிரம் பணம் கட்டி விருப்ப மனு அளித்துள்ளார்.

மேலும் விஜய் அவர்கள் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டால் அவர் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற அயராது உழைத்து பாடுபடுவோம் என உறுதியுடன் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.