Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இருசக்கர வாகனங்கள் நாளை பொது ஏலம்.திருச்சி போலீஸ் கமிஷனர் காமினி தகவல்.

0

'- Advertisement -

திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு இருசக்கர வாகனங்கள் நாளை செவ்வாய்க்கிழமை பொது ஏலம் விடப்பட உள்ளது.

 

திருச்சி மாநகர அமலாக்கப் பிரிவில் உரிய ஆவணங்கள் இல்லாததால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 4 இருசக்கர வாகனங்கள் நாளை பிப்ரவரி 10-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொன்மலை பகுதியிலுள்ள மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது.

 

இந்த வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புபவா்கள் ஏலம் நடைபெறும் நாளன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் ஆதாா் நகலுடன் ரூ.2 ஆயிரம் முன்பணம் செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும்.

ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகையுடன் அதற்குண்டான ஜிஎஸ்டியையும் சோ்த்து செலுத்தி வாகனத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று மாநகரக் காவல் ஆணையா் ந.காமினி தெரிவித்துள்ளாா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.