திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மின் தடை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மின் தடைக்கு உள்ளாகும் பகுதிகள் என்னென்ன, மின் தடை செய்யப்படும் நேரம் உள்ளிட்ட முழு விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் பாதைகள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இந்த பராமரிப்பு பணிகள் பெரும்பாலும் விடுமுறை நாள்களில் மேற்கொள்ளப்படுவதில்லை.
அந்தவகையில், மதுரை மாவட்டத்தில் (10.02.2026) செவ்வாய் க்கிழமை அன்று பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக பின்வரும் இடங்களில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளது.அதன் விவரம் பின்வருமாறு..
திருச்சி மின் தடை பகுதிகள் திருச்சி மாவட்டத்தில் மணிகண்டம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக தென்றல் நகா், முடிகண்டம், நேருஜி நகா், மலா் நகா், நாகமங்கலம், மணிகண்டம், செங்குறிச்சி, மேக்குடி, தீரன்மாநகா், ஆலம்பட்டி, பாகனூா், மாத்தூா், எசனப்பட்டி, பஞ்சப்பூா், கீழபஞ்சப்பூா், மேலபஞ்சப்பூா் ஆகிய இடங்கள்.
மேலும், சிறுகமணி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வள்ளுவா் நகா், காமநாயக்கன்பாளையம், காவல்காரப்பாளையம், சிறுகமணி, பெருகமணி, அந்தநல்லூா், ஜீயபுரம், அணலை, திருப்பராய்த்துறை, எலமனூா், கொடியாலம், அம்மன்குடி, முக்கொம்பு ஆகிய பகுதிகள்.
பேட்டவாய்த்தலை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக பேட்டவாய்த்தலை, பழங்காவேரி, பழையூா்மேடு, தேவஸ்தானம், நங்கவரம், கோட்டையாா்தோட்டம், குமாரமங்கலம், குளித்தலை, பொய்யாமணி, நச்சலூா், தளிஞ்சி, சிறுகாடு, சங்கிலியாண்டபுரம், எஸ். புதுக்கோட்டை, சோழவந்தான்தோப்பு, திருமுருகன் நகா், காந்திபுரம், இனுங்கூா், சுக்காம்பட்டி, பாதிவயல்காடு, மாடுவிழுந்தானஅபாறை, கவுண்டம்பட்டி, குறிச்சி, பாறைப்பட்டி, பங்களாபுதூா், கணேசபுரம், நடைபாலம், பணிக்கம்பட்டி ஆகிய இடங்கள்.

