Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா விளையாட்டு அரங்கில் ஜல்லிக்கட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை முகூர்த்த கால் நட்டு அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்.

0

'- Advertisement -

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் வருகின்ற 22 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஜல்லிக்கட்டு விழா

முகூர்த்த கால் நட்டு அமைச்சர் கே என். நேரு தொடங்கி வைத்தார்.

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க . ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு வருகின்ற 22 ம் தேதி ஜல்லிக்கட்டு விழா திருச்சியில் நடைபெற உள்ளது.

இதையொட்டி திருச்சி காஜாமலையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு விழா ஏற்பாடுகளை தொடங்கி வைத்தார். இதை யொட்டி முகூர்த்த கால்நடும் நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் துரைராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர், கவுன்சிலர் காஜாமலை விஜய், மாவட்ட துணை செயலாளரும் கவுன்சிலருமான முத்து செல்வம், மற்றும் நிர்வாகிகள் கமல் முஸ்தபா, முத்துக்குமரன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.