Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ஆசிரியரின் 7½ பவுன் தாலி திருட்டு.காவல்துறையின் அலட்சியத்தால் ஆட்சியரிடம் புகார்.

0

'- Advertisement -

திருச்சியில் ஆசிரியரின் 7½ பவுன் தாலி திருட்டு. போலீஸ் அலட்சியத்தால் ஆட்சியரிடம் புகார்.

திருச்சி அருகே ஆசிரியராக பணிபுரியும் பெண்ணின் 7 1/2 பவுன் தங்க தாலி சங்கிலி திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. போலீஸ் விசாரணையில் வனஜாவின் உறவினர் நாகரத்தினம் வசம் நகையை கொடுத்து வைத்ததாக ஒப்பு கொண்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டி பாதிக்கப்பட்ட ஆசிரியர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

திருச்சி பொன்மலை பகுதியைச் சேர்ந்த ரம்யா என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருடைய வீட்டிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவரின் தாயார் என்ற முறையில் அறிமுகமான வனஜா என்பவர் மாதம் ஒருமுறை வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.

கடந்த 29.04.2025 அன்று ரம்யா தனது தாலி சங்கிலியை வீட்டில் உள்ள மரப்பெட்டியில் வைத்து விட்டு பள்ளிக்குச் சென்றுள்ளார்.

30.04.2025 அன்று வனஜா வீடு சுத்தம் செய்த பிறகு, 01.05.2025 காலை சங்கிலி காணாமல் போனது தெரியவந்தது.

இதுகுறித்து பொன்மலை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் முதலில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. பின்னர் வனஜா மற்றும் அவரது கணவர் சந்திரசேகர் நகையை சுயம்புலிங்கம் மற்றும் சண்முகா அடகுக்கடைகளில் அடகு வைத்து பணம் பெற்றது தெரியவந்தது.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையரின் மக்கள்குறை தீர்க்கும் முகாமில் புகார் அளித்ததன் பேரில் குற்ற எண். 275/2025 கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

 

எனினும், நகையின் உண்மையான மதிப்பு சுமார் ₹7.5 லட்சம் இருந்த போதிலும், ₹75,000 மட்டுமே பதிவு செய்ததாகவும், முழுமையான விசாரணை நடத்தப்படவில்லை என்றும் ரம்யா குற்றம் சாட்டியுள்ளார்.

 

இதனால் நேர்மையான அதிகாரியை நியமித்து விசாரணை நடத்தவும், மீதமுள்ள நகைகளை மீட்கவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

இந்த சம்பவம் பொதுமக்களிடையே காவல்துறையினரின் நடவடிக்கையின் மீது கேள்விகளை எழுப்பியுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.