திருச்சியில் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து.
2 பேர் கைது.
திருச்சி காஜா மலைப்பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (வயது58) ஆட்டோ டிரைவர் இவருக்கும். மன்னார்புரம் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி
ராஜேஷ் கண்ணன் (வயது34) மற்றும் பிரகாஷ் (வயது 21) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் நேற்று ரத்தினம் மன்னார்புரம் ரவுண்டானா அருகே ஆட்டோ பட்டறையில் தன் ஆட்டோவிற்கு பழுது பார்த்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த ராஜேஷ் கண்ணன் மற்றும் பிரகாஷ் ஆகிய இரண்டு பேரும் ரத்தினத்திடம் தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்தியுள்ளனர்
இதனால் காயமடைந்த ரத்தினம் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கே கே நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து ராஜேஷ் கண்ணன் மற்றும் அவருடன் இருந்த பிரகாஷ் ஆகிய இரண்டு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

