திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கு அருகே கேட்பாரற்று இருந்த
8 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்
திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கு திடீர் நகர் அருகே 5 இருசக்கர வாகனங்கள் நம்பர் பிளேட் இல்லாமல் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது உடனடியாக போலீசார் அங்கு சென்று ஐந்து இருசக்கர வாகனங்களை கைப்பற்றினர்,
இதேபோல நேற்று முன்தினம் அரியமங்கலம் குப்பை கிடங்கு ஸ்டாலின் நகர் அருகே மூன்று இரு சக்கர வாகனங்கள் நம்பர் பிளேட் இல்லாமல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது தொடர்ந்து போலீசார் அந்த மூன்று வாகனங்களையும் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட எட்டு இரு சக்கர வாகனங்களும் எதற்காக பயன்படுத்தப்பட்டது
யார் ?அதன் உரிமையாளர்கள் ஏன் நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களை அப்பகுதியில் நிறுத்தி சென்றனர் என பல்வேறு கோணங்களில் அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

