Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பா.ஜனதா கட்சி மதிக்காததால் தான் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினோம்.லட்சக்கணக்கானோர் திரண்ட தமிழர் தேசம் கட்சியின் திருச்சி மாநாட்டில் கே.கே.செல்வகுமார்.

0

'- Advertisement -

லட்சக்கணக்கானோர் திரண்ட திருச்சி மாநாட்டில்

முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு தமிழர் தேசம் கட்சியால் மட்டுமே சாத்தியம் கே.கே. செல்வகுமார் பேச்சு.

தமிழர் தேசம் கட்சியின் மூன்றாவது மாநில மாநாடு திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலை ஆலம்பட்டி புதூரில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான , நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

 

இதனால் மத்திய மண்டலம் குலுங்கியது.

இந்த மாநாட்டில் தமிழர் தேசம் கட்சி மற்றும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் கே. கே. செல்வகுமார் நிறைவு பேருரை ஆற்றினார். அப்போது அவர் பேசிய போது :-

நாடாண்ட சமூகம் முத்தரையர் சமூகம். ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட ராஜ வம்சம். ஆனால் இன்றைக்கு தமிழகம் முழுவதும் பெரும்பான்மையான முத்தரையர் வசிக்கும் கிராமங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லை.

இது குறித்து இங்கு இருக்கும் அமைப்புகள் எதுவும் பேசுவதில்லை. அப்படி பேசினால் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் பகைத்து கொள்ளக்கூடும் என்ற பயம். இங்கு எதிர்த்து கேள்வி கேட்கக்கூடிய இடத்தில் நாம் தான் இருக்கிறோம்.

வீர முத்தரையர் முன்னேற்ற சங்கமும் தமிழர் தேசம் கட்சியின் தம்பிகள் தான் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் எதிர்த்து களமாடுகிறார்கள்

எங்களால் மட்டும் தான் இந்த மக்களுக்கான அரசியலை கொடுக்க முடியும். முத்தரையர் மக்களுக்கு எது தேவை என்பது எங்களுக்கு தெரியும். பா.ஜனதா கட்சி மதிக்காததால் தான் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினோம்.

வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசம் கட்சி தொடர்ந்து முத்தரையர் சமூக மக்களின் பிரச்சனைக்காக போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி களம் நின்று போராடுவதை பார்த்து தான்

தி.மு.க. தலைமை எங்களை கூப்பிட்டு ஒரு சீட்டு தருவதாக சொல்லி இருக்கிறார்கள்.

எங்கள் சமூக மக்களுக்காக பாஜக என்ன செய்தது?

எங்கள் சமுதாய நலனுக்காக யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பேன். துறப்பேன்.

கூட்டணி மூலம் எங்கள் வியூகத்தை மாற்றி அமைத்திருக்கிறோம். ஆகவே

போலிகளையும் புல்லுருவிகளையும் முத்தரையர் சமூக மக்கள் இனம் கண்டு கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

இந்த மாநாட்டில் தமிழர் தேசம் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் குருமணிகண்டன், பொதுச் செயலாளர் தளவாய் ராஜேஷ், வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் மாநில அமைப்பாளர் கள்ளிக்குடி எம். ராஜேந்திரன், தலைமை ஒருங்கிணைப்பாளர் வைரவேல், துணைத் தலைவர் கள்ளிக்குடி கோ.சம்பத்,இளைஞர் அணி துரை குணசேகரன், மாநகர் மாவட்ட செயலாளர் வள்ளல் மணி, மாநில ஆலோசகர் ராமு விநாயகம், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் டி. எம்.குமார், நத்தம் பூமி அம்பலம், செம்ம கிடேஸ்வரன், புதுகை காசி, வழக்கறிஞர் கௌதம், செய்தி தொடர்பாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.