Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தமிழ்நாடு அனைத்து மொபைல் ரீடெய்லர்ஸ் சங்க எழுச்சி மாநாடு. மாநிலத் துணைத் தலைவர் ஜலாலுதீன் அழைக்கிறார்.

0

'- Advertisement -

திருச்சியில் வருகின்ற 31ம் தேதி சனிக்கிழமை அன்று மதுரை ரோட்டில் கள்ளிக்குடி பகுதியில் (பஞ்சபூர். புதிய பேருந்து நிலையம் அருகில்) அமைந்துள்ள கிறிஸ்டல் மண்டபத்தில் தமிழ்நாடு அனைத்து மொபைல் விற்பனையாளர்கள் சங்க எழுச்சி மாநாடு மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

 

இதுகுறித்து TAMRA வின் மாநிலத் துணைத் தலைவர் ஜலாலுதீன் அனைவரையும் வரவேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 

வருகின்ற சனிக்கிழமை அன்று திருச்சியில் பஞ்சபூர் கலைஞர் முனையம் அருகிலுள்ள கிறிஸ்டல் கான்வென்ஷன் சென்டரில் காலை எட்டு முப்பது மணியிலிருந்து தம்ரா மாநில எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.

 

இம்மாநாட்டின் முக்கிய கருப்பொருள்:-

 

முக்கிய பொது வர்த்தக மொபைல் சில்லறை விற்பனையாளர்களை ஊக்குவித்தல் மற்றும் கல்வி கற்பித்தல்.

 

அதிகமாக சம்பாதிப்பது எப்படி என்பதை அவர்களுக்குக் கற்பித்தல்

 

வெற்றிக்கு உயிர்வாழ்தல்

வலுவான சில்லறை வணிக சூழல் அமைப்புக்கான நியாயமான வர்த்தக நடைமுறை,

 

சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் புதுப்பிப்புகள் மேலும் நமது சங்க வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

 

மாநாட்டு அரங்கில் 50க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம் பெற உள்ளது.

 

தமிழகம் முழுவதும் இருந்து மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தரும் அனைத்து விற்பணையாளர்களுக்கும் காலை டிபன் மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி ,வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, தம்ரா மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

 

எனவே மாநிலம் முழுவதும் உள்ள நமது விற்பனை சொந்தங்கள் அனைவரும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன் என தாம்ரா மாநிலத் துணைத் தலைவர் திருச்சி லவ்லி பேன்சி ஜலாலுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.