திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் நேருவின் வெற்றிக்கு ஆப்பு வைக்கும் திமுக பகுதி செயலாளர் போட்டோ கமால்.
திருச்சி 29 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கமால் முஸ்தபா .இவர் திமுக தென்னூர் பகுதி செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
பல ஆண்டுகளாக கட்சிப் பணியாற்றி வரும் பகுதி செயலாளர்களுக்கு இல்லாமல் இவருக்கு தமிழகத்தின் சிறந்த பகுதி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது.அதையும் மீறி அவரது பகுதியில் உள்ள நிர்வாகிகளின் சிறந்த செயல்பாட்டால் சிறந்த பகுதி செயலாளர் பரிசு வென்றார்.
இந்த நிலையில் இவர் குறித்து பல புகார்கள் வந்ததை தொடர்ந்து நாம் நேரில் சென்று விசாரித்த போது அந்த வார்டு பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் சிலர் நம்மிடம் கூறியது:-
சின்னசாமி நகர் குடிசை பகுதிகளில் உள்ள 400 வீடுகளுக்கு அரசின் திட்டமான ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் பாதாள சாக்கடை இணைப்பு பெற்று தருவதாக கூறி 400 பேரிடம் தலா ரூ.2500 வசூல் செய்து உள்ளார்.ஒவ்வொரு வீட்டின் முன்பும் ஐந்து அடி நீளமுள்ள பிளாஸ்டிக் பைப் ஒரு எல் பெண்டு வைத்ததுடன் பணியை நிறுத்தி கொண்டார்.
குடிநீர் இணைப்புக்கு என சிலரிடம் ரூபாய் 25000 வசூலித்துள்ளார்.அதுவும் ஆறு மாதம் கழித்து தான் இணைப்பு தரப்படும் எனக் கூறியுள்ளார்.மாநகராட்சியில் பத்தாயிரம் தான் பணம் கட்ட வேண்டும் என கூறிய போது JE ராமேஸிடம் சென்று கேட்டுக் கொள்ளுங்கள் என கூறி உள்ளார் கமல்.ஜெ. இ ரமேஷ் கவுன்சிலர் சொல்லாமல் என்னால் எதுவும் செய்ய முடியாது என கைவிரித்துவிட்டார்.
ஒரு பள்ளிவாசல் ஜமாத்திடம் மூன்று பாதாள சாக்கடை கணக்சன் தருவதாக கூறி ரூ.9000 பெற்று அந்த வேலையையும் செய்யவில்லை கவுன்சிலர் கமால் முஸ்தபா .
யாராவது ஒரு வீட்டில் படிக்கட்டு கட்டினால் கூட ரூ.25 ஆயிரம் இவருக்கு கப்பம் கட்ட வேண்டும்.ஏன் என கேட்டால் ரூ.50 லட்சம் செலவு செய்து கவுன்சராகியுள்ளேன்,அந்தப் பணத்தை எடுக்க வேண்டாமா என கூறி உள்ளார்.
தென்னூர் பகுதிக்கு உட்பட்ட 28-வது வார்டில் இவருக்கு எதிர்ப்புகள் இருப்பதால் 29 வார்டு பாக நிர்வாகிகளை 28 வது வார்டில் இணைத்து வருகிறாராம்.
சின்னசாமி நகர், சத்யா நகர், எடத்தெரு, பாரதிநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் எந்த ஒரு பணியும் கவுன்சிலர் மேற்கொள்ளாததால் பொதுமக்கள் திமுக மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
ரேஷன் கடை மற்றும் பேருந்து திரும்பும் போக்குவரத்துக்கு இடையூறாக கவுன்சிலர் அலுவலகம் கட்டி வருவது அப்பகுதி பொதுமக்கள் இல்லாமல் திமுக நிர்வாகிகள் இடையேயும் முகம் சுழிக்க வைத்துள்ளது.
இந்த தேர்தல் முடிந்தவுடன் எனது பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகள் (சுமார் 15 பேர் ), அனைவரையும் கூண்டோடு மாற்றி விடுவேன் எனவும் கூறி வருகிறாராம்.
திருச்சி திமுகவில் உள்ள அனைவரும் அமைச்சர்களுடன் நாங்கள் உள்ளோம் என்று தான் கூறுவார்கள்.ஆனால் போட்டோ கமால் முஸ்தபா மட்டும் அமைச்சர் என்னுடன் உள்ளார் எதைப் பற்றியும் எனக்கு கவலை இல்லை என்றுதான் கூறுவாராம்.யார் என்ன புகார் கூறினாலும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை என தெனாவட்டாக பேசி வருகிறாராம்.இவரைப் பற்றி உண்மையான செய்தி வெளியிட்டால் அந்த நிருபர்களுக்கு கொலை மிரட்டலும் விடுவாராம்.ஏனென்றால் அவரிடம் 25க்கும் மேற்பட்ட கூலிப்படையினர் உள்ளனர் எனக்கு கூறப்படுகிறது.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்றே மாதங்கள் உள்ள இந்த நிலையில் திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே என் நேரு போட்டியிடுவது உறுதி. ஆனால் தென்னூர் பகுதிக்கு உட்பட்ட 28 மற்றும் 29 வது வார்டுகளில் சுமார் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் (திமுக) ஓட்டு உள்ளது, இது கமால் முஸ்தபாவின் செயல்பாட்டால் அமைச்சர் நேருக்கு எதிராக மாறும் என கருதப்படுகிறது.
இது குறித்து அமைச்சர் கே என் நேரு உடனடியாக தீர விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்த பின் மேற்குத் தொகுதியில் போட்டியிடுவது உகந்தது என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.
திருச்சியில் கிழக்கு மற்றும் மேற்கு தொகுதியில் 90 ஆயிரம் இஸ்லாமியர்கள் ஓட்டு உள்ளது.எனவே மேல் இடத்தில் கேட்டு கிழக்கு அல்லது மேற்கு தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்றும் தனது அல்ல கைகளிடம் கூறி வருகிறாராம் கமால்
கடந்த தேர்தலில் அமைச்சருக்கு எதிராக வேலை பார்த்த அப்துல் காதர் என்பவரை தனது ஓட்டுனராக பகுதி செயலாளர் கமல் பணிக்கு வைத்துள்ளார்.
அமைச்சர் பகுதி செயலாளர் கமாலிடம் இவரது தம்பி இஸ்மாயில்
மற்றும் இவர்கள் இரண்டு பேர் தலைமையில் ஒயிஸ் அஹமத் , நிஜாம்,லியாக்கத் அலி மற்றும் இவர்களது கூட்டாளிகள் புறா சேட்டு, காந்தி, யாக்கத் அலி,முத்துக்குமார், ஆறுமுகம்,நிஜாம் மற்றும் இவர்களுக்கெல்லாம் தலைமை வகிப்பது யார் இவர்கள் என்ன பணி செய்கிறார்கள் பற்றி விசாரித்தால் போட்டோ கமால் பற்றி முழுமையாக தெரியவரும்.

