திருச்சி ரியல் எஸ்டேட் புரோக்கர் வீட்டை பூட்டி சென்ற ஒரு மணி நேரத்தில் 20 பவுன் நகை திருட்டு .
திருச்சி கருமண்டபம் வசந்தா நகரை சேர்ந்தவர் ராஜன் (வயது 51) இவர் ரியல் எஸ்டேட் புரோக்கராக இருந்து வருகிறார். இவர் கடந்த 16 ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள கடைக்கு இரவு டிபன் வாங்க சென்று உள்ளார்
.பிறகு வீட்டிற்கு திரும்ப வந்த பொழுது வீட்டில் மின் விளக்கு எரியாமல் இருந்தது. இதனை பார்த்து சந்தேகம் அடைந்த ராஜன் உடனடியாக எலெக்ட்ரிசனை அழைத்து வந்து மின்விளக்கை எரிய செய்து உள்ளார். பிறகு வீட்டுக்குள் சென்று பார்த்த பொழுது வீட்டின் பின்பக்க கதவு உடைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சிடைந்தார். பிறகு ராஜன் வீட்டின் உள்ளே அறை உள்ளே சென்று பார்த்து உள்ளார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 20 பவுன் நகை திருட்டு போய் இருப்பது தெரியவந்து உள்ளது. அப்பொழுது தான் ராஜன் வீட்டில் மர்ம ஆசாமி புகுந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 20 பவுன் நகைகளை திருடி சென்றது தெரிய வந்து உள்ளது.
இதையடுத்து ராஜன் உடனடியாக செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து போலீசார் மற்றும் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜன் வீட்டில் பின்பக்க கதவை உடைத்து 20 பவுன் நகையை திருடிய மர்ம ஆசாமியை வலைவிசி தேடி வருகின்றனர்.

இந்த மர்ம ஆசாமி குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது ராஜன் வீட்டை பூட்டி விட்டு சென்ற ஒரு மணி நேரத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

