திருச்சியில் 24 மணி நேரமும் இயங்கும் சந்துக்கடை மது கூடம்.தட்டிக் கேட்கும் போலீசையே தாக்கும் திமுக விஐபி ஆதரவு பெற்றோர். வீடியோவுடன் ….
திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையஎல்லைக்கு உட்பட்ட கோனார் சத்திரம் பகுதியில் உள்ள ஒரு கோழிக்கறி கடையின் பின் 24 மணி நேரமும் சந்து கடையில் மதுபானம் கள்ள சந்தையில் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த சந்து கடை மதுபான கடையினை குமார் மற்றும் அன்பு என்பவர்கள் நடத்தி வருகின்றனர்.இவர்கள் திமுக அந்தநல்லூர் ஒன்றிய பொறுப்பில் உள்ள ஒரு நபரின் ஆசியுடன் இந்த கள்ள மதுபான கடையை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த சந்துக்கடை தகவல் அறிந்த சோமரசம்பேட்டை காவல் நிலைய போலீசார் சோதனைக்கு சென்ற போது குமார் மற்றும் அன்பு ஆகியோர் சேர்ந்து காவலர்களை கொலை வெறியுடன் தாக்கி உள்ளனர்.
சீருடை கிழிந்து ரத்தம் சொட்ட சொட்ட காவல் நிலையம் திரும்பிய காவலர்கள் காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

எனவே சோமரசம்பேட்டை காவலர்களே மத்திய மண்டல காவல்துறை கண்காணிப்பாளர் தான் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார் என கூறப்படுகிறது.
சந்து கடை மதுபான கடையை மூட வேண்டும் என கோரிக்கை வைக்கும் சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் கொலை மிரட்டல் விடுக்கும் குமார் மற்றும் அன்பு மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

