திருச்சியில் போதை மாத்திரை விற்ற ரவுடிகள் உள்பட 9 பேர் கைது.
திருச்சி பாலக்கரை, காந்தி மார்க்கெட், அரசு மருத்துவமனை, உறையூர், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை பகுதிகளில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் பெயரில் போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது காந்தி மார்கெட் பூக்கொல்லை அருகே சந்தேகம் ஏற்படும் வகையில் நின்று கொண்டிருந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில்,
போதை மாத்திரை வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து
தாரா நல்லூர் வடக்கு தெரு கீரை கடை பஜாரை சேர்ந்த ரவுடி யாசர் (வயது 25 )
கைது செய்து அவரிடமிருந்து 6 போதை மாத்திரை ஊசிகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று பாலக்கரை பெல்ஸ் கிரவுண்ட் அருகே போதை மாத்திரை விற்ற பாலக்கரை சங்கிலியாண்டபுரம் தெரசா அம்மாள் காலனியை சேர்ந்த ஜஸ்டின் கிறிஸ்துராஜ் ( வயது26 )மற்றும் பாலக்கரை காஜா பேட்டை செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த கேசவ பூசன் (வயது 19 ), மற்றும் பாலக்கரை கெம்ஸ்டோன் ரெயில்வே தண்டவாளம் அருகே போதை மாத்திரை விற்ற பாலக்கரை ஆட்டுக்கார தெருவை சேர்ந்த ரவுடி கௌரிஸ் (வயது 25), பாலக்கரை கெம்ஸ்டோன் சவேரியார் கோவிலைச் சேர்ந்த ரவுடி ராபர்ட் வின்ஸ்லி (வயது 27)
ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 32 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
திருச்சி உறையூர் நவாப் தோட்டம் அருகே போதை மாத்திரை விற்ற உறையூர் காவிரி நகர் 3வது கிராஸ் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் (வயது 27) மற்றும் உய்யகொண்டான் திருமலை லாவண்யா கார்டன் பகுதியை சேர்ந்த செந்தில் லட்சுமி நாராயணன் (வயது 24) இருவரை கைது செய்து அவரிடம் இருந்த 20 மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வண்ணாரப்பேட்டை பகுதியில் வண்ணாரப்பேட்டைபோதை மாத்திரை விற்ற திவிக நகரை சேர்ந்த ரவுடி சந்தோஷ் (வயது 24 )கைது செய்து அவரிடமிருந்து 8 போதை மாத்திரைகளை அரசு மருத்துவமனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

