மாணவர்களுக்கு வாழை இலையில் பொங்கல் கரும்புடன் விருந்து வைத்து சிந்தம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி சமத்துவப் பொங்கல் விழா
சிந்தம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி சமத்துவப் பொங்கல் விழா சீரோடும் சிறப்போடும் இன்று கொண்டாடப்பட்டது .
பள்ளிவளாகம் முழுவதும்
வண்ண வண்ணக் கோலங்களாலும் மாவிலைத் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டது.
செங்கரும்போடு
புதுப் பானையில் புத்தரிசி,வெல்லம் சேர்த்து *”பொங்கலோ* *பொங்கல்* “என்ற மாணவர்களின் குலவையோடு
பொங்கல் வைக்கப்பட்டது.
உழவுக்கும் உழவர்களுக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக இந்த சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
மாணவர்களிடம் ஒற்றுமையை வளர்க்கவும் சாதி ,மத, இன வேறுபாடுகளைக்
கடந்து ஒருவரோடு ஒருவர் அன்பு பாராட்டவும் இந்த இந்த பொங்கல் விழா அடித்தளம் அமைத்தது.நட்புறவு, விட்டுக் கொடுத்தல், சமத்துவம்,
சகோதரத்துவம் ,
பகிர்ந்து உண்ணுதல் ஆகிய அடிப்படை குணங்களை மேம்படுத்தும் விதமாகவும் இந்த சமத்துவப் பொங்கல் விழா அமைந்தது. விழாவின் முத்தாய்ப்பாக மாணவர்கள் அனைவருக்கும் தலைவாழை இலையில் பொங்கல் விருந்து செங்கரும்புடன் பரிமாறப்பட்டது.
தலைமையாசிரியர் கீதா தலைமையில் ஆசிரியர்களின் ஒருங்கிணைப்புடன் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்ட இந்த சமத்துவப் பொங்கல் விழாவை பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும்
ஊர்ப்பொதுமக்களும் பள்ளி மேலாண்மை குழுவினரும் வெகுவாக பாராட்டினர்.

