Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அனைத்து ஊராட்சிகளிலும் வரும் 14ஆம் தேதி சமத்துவ பொங்கல் முன்னிட்டு மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கான கோலப்போட்டி. திருச்சி கலெக்டர்.

0

'- Advertisement -

வரும் 14-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சமத்துவ பொங்கல் விழா நடக்கிறது என்று திருச்சி கலெக்டர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளானது, இயற்கைக்கும் உழைப்பிற்கும் நன்றி கூறும் திருநாளாகவும், சமூக வேறுபாடுகளை மறந்து, “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்ற உயரிய தமிழர் சிந்தனையை நடைமுறையில் வெளிப்படுத்தும் நாளாகவும் விளங்குகிறது.

 

இந்த ஆண்டு திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் 14.01.2026 ( புதன்கிழமை) அன்று பாரம்பரிய முறையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெறுகிறது. விழாவில் பொதுமக்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், சமத்துவ பொங்கல் விழா நடைபெறும் நாளன்று மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள பெண்களுக்கு கோலப்போட்டி நடைபெற இருப்பதால், சுய உதவிக்குழுவில் உள்ள அனைத்து பெண்களும் கோலப்போட்டியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.