Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி திமுக பிரமுகர் உள்ளிட்ட 15 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.

0

'- Advertisement -

கரூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தாய், தாத்​தாவுடன் 2021-ல் திருச்சி புத்​தூர் பகு​தி​யில் தங்​கி​யுள்​ளார்.

அப்​போது, அவருக்கு பலர் பாலியல் துன்​புறுத்​தல் அளித்​துள்​ளனர்.

அந்த சிறுமி​யின் தாய், தாத்​தா, தாத்​தா​வின் தம்​பி​யான திமுக வட்ட செயலாளர் காளை உள்​ளிட்​டோர் இதற்கு உடந்​தை​யாக இருந்​துள்​ளனர்.

 

இந்​நிலை​யில், கர்ப்​பமடைந்த அந்த சிறுமிக்கு 2023 ஜூன் 14-ம் தேதி தனி​யார் மருத்​து​வ​மனை​யில் பெண் குழந்தை பிறந்​துள்​ளது.

 

குழந்​தையை மருத்​து​வ​மனை​யில் விட்​டு​விட்​டு, சிறுமி​யுடன்

அக்​குடும்​பத்​தினர் தலைமறை​வாகி​விட்​டனர்.

 

இந்​நிலை​யில், கடந்த டிசம்பர் 23-ம் தேதி திருச்சி மாவட்ட குழந்​தைகள் பாது​காப்​பு நலக்குழுவில் விசா​ரணைக்கு ஆஜராகும்​படி, சிறுமி​யின் குடும்​பத்​தினருக்கு கடிதம் அனுப்​பப்​பட்​டது. கடந்த 3-ம் தேதி அந்த சிறுமி, தனது தாயார், தாத்​தாவுடன் ஆஜரா​னார். விசா​ரணை​யில், தனக்கு யாரெல்​லாம் பாலியல் தொல்லை கொடுத்​தனர் என்று சிறுமி விளக்​கி​யுள்​ளார்.

இது தொடர்​பாக ஸ்ரீரங்​கம் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில், திருச்சி மாவட்ட

குழந்​தைகள்  பாது​காப்பு அதி​காரி ராகுல்​காந்தி புகார் கொடுத்​தார்.

அதன்​பேரில், சிறுமி​யின் தாய், தாத்​தா, இவரது தம்​பி​யான திமுக வட்ட செயலாளர் காளை உள்ளிட்ட 15 பேர் மீது போக்சோ சட்​டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்​து, விசா​ரித்து வருகின்​றனர்.

மேலும், சிறுமி​யின் தாய், தாத்​தா, இவரது தம்​பியைப் பிடித்து ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலைய போலீ​ஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்​துடன், சிறுமி​யின் குழந்​தைக்கு யார் காரணம் என்​ப​தைக் கண்​டறிய டிஎன்ஏ பரிசோதனை​யும் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.