திருச்சி ஸ்ரீரங்கத்தில் என்ஐடி பேராசிரியை கார் கண்ணாடியை உடைத்து நகை, பணம் திருட்டு
ஸ்ரீரங்கம் காவல் நிலையம் போலீசார் மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு .
திருச்சியை அடுத்த துவாக்குடி என்ஐடி குடியிருப்பு வளாகத்தை சேர்ந்தவர் கோகுல்நாத் (வயது 43) இவர் வீட்டு உணவு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மனுஷா இவர் திருச்சியில் உள்ள என்ஐடி யில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் கடந்த 1ந்தேதி ஆங்கில புத்தாண்டு அன்று இருவரும் காரில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தனர். பிறகு மேலூர் ரோடு பகுதியில் காரை நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்று விட்டனர்.
சாமி தரிசனம் முடிந்த பின் இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் கோவிலில் இருந்து வெளியே வந்து காரில் ஏற முயன்று உள்ளனர். அப்போது காரின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு கணவன் மனைவி இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிறகு கார் கதவை திறந்து உள்ளே பார்த்த போது பின் சீட்டில்இருந்த மடிக்கணினி ரூபாய் 9000 பணம் அத்துடன் 20 கிராம் தங்க வளையல் மற்றும் வங்கி காசோலை புத்தகம் ஆகியவை திருட்டுப் போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பிறகுதான் அவர்களுக்கு மர்ம ஆசாமிகள் யாரோ காரின் பின்பக்க கதவை உடைத்து திருடிச் சென்று இருப்பது தெரிய வந்தது .இதை தொடர்ந்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசாரிடம் கோகுல்நாத் புகார் கொடுத்தார்.
அத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கார் கண்ணாடியை உடைத்து இரண்டரை பவுன் நகை மற்றும் 9 ஆயிரம் பணம் மடிக்கணினி போன்றவற்றை திருடி சென்ற மர்ம ஆசாமைகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

