திருச்சி அரசு கல்லூரி மாணவர் விடுதியில் பதுங்கி இருந்த 3 ரவுடிகளை
மடக்கி பிடித்த மாநகர போலீசார் .
திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள டாக்டர்.அம்பேத்கர் சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதியில் ரவுடிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாநகர போலீசார் மற்றும் கே.கே .நகர் காவல் நிலைய போலீசார் மாணவர் விடுதியில் பதுங்கி இருந்த, சரித்திர பதிவேடு குற்றவாளிகளான ஜான்போஸ்கோ, சக்திவேல் மற்றும் வெற்றி ஆகிய மூன்று பேரையும் திருச்சி மாநகர போலீஸார், செல்போன் டவர் லொக்கேசன் உதவியோடு கைது செய்தனர்.
கைதான ரவுடிகள் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 90 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
அரசு மாணவர் விடுதியில் ரவுடிகள் பதுங்கி இருந்தது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ரவுடிகள் இங்கு யார் உதவி உடன் தங்கியிருந்தனர் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

