Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் மருந்து வணிகர் தற்கொலை

0

'- Advertisement -

திருச்சியில் கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில்

மருந்து வணிகர் தூக்கு போட்டு தற்கொலை

திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தக்கடை பொதுத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (வயது 43). இவர் கடந்த ஜனவரி மாதம் மருந்து மொத்த வணிகம் செய்ய தொடங்கினார்.

இதற்காக மெடிக்கல் கடை உரிமையாளர் ஒருவரிடம் ரூபாய் 2 லட்சம் பணம் கடனாக பெற்றார்.

இந்நிலையில்

தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. இதனால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.

இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான ராஜேஷ் குமார் யாரும் எதிர்பாராத வகையில்

உறையூர் பஞ்சவர்ணசாமி கோவில் தெருவில் உள்ள தமது அலுவலகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது மனைவி நீலா உறையூர் காவல் நிலைய கோடீஸ்வரர் இடம் புகார் செய்தார்.

அந்த புகாரின் பேரில் உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.