தங்கத்தின் விலையாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்து வருகிறது. சிலசமயம் ஒரே நாளில் 2 முறை கூட விலை உயர்ந்துவிடுகிறது.
இதனால் நகைக்கடனில் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட சூழலில், நகையை வைத்து அதிகபட்ச கடனை எப்படி பெறுவது? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? என்பதை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
தங்கத்தின் விலை உயர்வு காரணமாக நகைக்கடனில் சில சிக்கல்கள் உருவாகி வருகின்றன. சில நேரங்களில் நகையின் உண்மையான மதிப்பை விட அதிகமாக கடன் வழங்கப்படுகிறது.
இதனால், கடனை திருப்பி செலுத்தாமல் நகையை வங்கியில் விட்டு விடும் நிலை ஏற்படுகிறது. இது வங்கிகளுக்கு நஷ்ட அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது… அதனால்தான் கடந்த வாரம் ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
அதன்படி, வங்கிகள் இனி நகையின் மதிப்பின் அடிப்படையில் கடன் அளவை கட்டுப்படுத்தும். 5 லட்சம் ரூபாய்க்கு மேலான கடன்களில், நகையின் மதிப்பின் 60-65% வரை மட்டுமே கடன் வழங்கப்படும்.
முன்பு இதே கடனில் 70-72% அளவு கடன் கிடைத்தது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் கடன் தொகை குறையும். ஆனால், குறைந்த கடன்களுக்கு சிறிது விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது… அதாவது 2 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுவோர், நகையின் மதிப்பின் 85% வரை கடன் பெறலாம். 2 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுவோர் 80% வரை கடன் பெற முடியும்.
இந்த விதிகள் உலகளாவிய நாணய மாற்றங்கள் மற்றும் தங்க விலையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவையாகும்.. இதன் மூலம், வங்கிகள் கடனில் சீரமைப்பையும், வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும்.
அதேபோல வங்கிகள் இதற்கென்று நகைக்கடன் திட்டங்களை மாற்றி செயல்படுகின்றன உதாரணத்துக்கு கனரா வங்கியை எடுத்து கொண்டால், கனரா வங்கி அதிக கடன் தேவைப்படும் நபர்களுக்கு சிறந்ததாக உள்ளது.
இந்தியன் வங்கி :
இங்கு நகையின் தரத்தைப் பொறுத்து 90% வரை கடன் வழங்கப்படுகிறது. அதாவது, ஒரு சவரனுக்கு சுமார் 90,000 ரூபாய் வரை கடன் கிடைக்க வாய்ப்புள்ளது.,., இதற்கான வட்டி விகிதம் 8.9% ஆகும்.
அதேபோல வட்டி குறைவாக இருக்க வேண்டும் என்று நினைப்போருக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி பெஸ்ட் சாய்ஸ் ஆகும்.. இங்கு 68% LTV அளவில் கடன் வழங்கப்படுகிறது, வட்டி விகிதம் 8.2% ஆகும். இந்தியன் வங்கியிலும் 8.5% வட்டியில் 68% LTV அளவில் கடன் கிடைக்கும். இந்தியன் வங்கியில் வட்டி விகிதம் 8.5% ஆகவும், கடன் தொகை மதிப்பு (LTV) 68% ஆகவும் உள்ளது.
நகைக்கடன் – நன்மை, வசதிகள்
மொத்தத்தில் வங்கிகளில் நகைக்கடன் பெறுவதால் பல நன்மைகள் வாடிக்கையாளர்களுக்கு உள்ளன.. முக்கியமாக குறைந்த வட்டியில் கிடைக்கும். நகைகள் பாதுகாப்பாக அடகு வைக்கப்படுகின்றன. கடன் தொகை, வட்டி, காலம் தெளிவாக தெரிவிக்கப்படுகிறது.
நம்பகமானதாகவும் உள்ளது.. நம்முடைய நகைகளுக்கு சட்ட ரீதியாக பாதுகாப்பு உண்டு. மாதந்தோறும் செலுத்தும் வசதி, நகையை மீட்கும் வாய்ப்பும் இருக்கிறது. அதனால்தான், நகைக்கடனுக்கான முக்கியத்துவம் எப்போதுமே அதிகரித்து காணப்படுகிறது.

