திருச்சி காவிரி ஆற்றுக்கு
குளிக்கச் சென்ற முதியவர் மாயம் .
காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை.
திருச்சி வரகனேரி முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் அலி (வயது 65). கூலித் தொழிலாளி.
கடந்த சில நாட்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்த அக்பர் அலி சம்பவத்தன்று
காவிரி ஆறு கம்பரசம் பேட்டை படித்துறையில் குளிக்க செல்வதாக வீட்டில் கூறி சென்றார்.
அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. 
இதனைத் தொடர்ந்து அக்பர் அலி மனைவி ஜெரினா பேகம் காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அக்பர் அலியை தேடி வருகின்றனர்.

