திருச்சி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் ஆஸ்பெட்டாஸ் போடும் பணியின் போது தவறி விழுந்த தொழிலாளி பரிதாப பலி.
காந்தி மார்க்கெட் அருகே திருச்சி வெல்டிங் தொழிலாளி தவறி விழுந்து பலி
காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை.
திருவண்ணாமலை மாவட்டம் சொர்ணபந்தல் செங்கம் வீரபாண்டிய கட்டபொம்மன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது 53. ). வெல்டிங் தொழிலாளி.
இவர் திருச்சி தனரத்தினம் நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் கடந்த சில நாட்களாக வெல்டிங் வேலை செய்து வந்தார்.
பின்னர் அங்கு ஆஸ்பெட்டாஸ் சீட்டுகள் போடும் பணியில் ஈடுபட்ட போது தவறி கீழே விழுந்தார் .
இதில் அவரது தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது சக தொழிலாளிகள் அவரை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .பின்னர் மேல் சிகிச்சைக்காக பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதிலும் பழநி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். 
இது குறித்து சக தொழிலாளி ராமச்சந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

