திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் 10 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு.
திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் 10 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு. அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம்.
அணு மின் நிலையம் மூலம் தனியார் நிறுவனங்கள் மின்சாரம் தயாரிக்க அனுமதியளித்த அணு மின் உற்பத்தி மசோதா சாந்தி – 2025 ஐ திரும்பப்பெற வேண்டும்.
மின்சார வினியோகத்தை முற்றிலும் தனியாரிடம் ஒப்படைக்கும் மின்சார சட்டத்திருத்த மசோதா 2025 ஐ ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும்
ஒன்றிய அரசு, கடந்த 21ந் தேதி அறிவித்த
லேபர் கோடு (தொழிலாளர் நல சட்ட திருத்தம்)
அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். காப்பீட்டில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 12-ந் தேதி நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் குறித்த அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள திருச்சி தொழிலாளர் முன்னேற்ற சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. 
கூட்டத்திற்கு தொமுச மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தொமுச மாவட்ட செயலாளர் நெல்சன், சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், ஏஐடியுசி நடராஜா, ஐஎன்டியுசி சேசுராஜ், எச் எம் எஸ் ஞானதுரை, ஏ ஐ சி சி டி யு தேசின்,
யு டி யு சி சிசிவசெல்வம், எல் எல் எப் தெய்வீகன், விவசாயிகள் சங்கம் அயிலை சிவசூரியன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பிப்ரவரி 12-ந் தேதி நடக்கும் அகில இந்திய பொது வேலை நிறுத்த போராட்டத்தில் திருச்சியில் அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பது,பொது வேலை நிறுத்தம் குறித்து ஜனவரியில் போராட்ட ஆயத்த அனைத்து தொழிற்சங்க மாநாடு நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

