திருச்சி தெற்கு மாவட்டம் திமுக சார்பில் உதயநிதியின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு 48வது நிகழ்வாக அவரது வெற்றிக்குப் பெறும் துணை நிற்பது கட்சிப் பணியே அரசுப்பணியே என்ற தலைப்பில் பட்டிமன்றம்.
DCM48
தமிழ்நாடு துனை முதலமச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகரம் சார்பாக சிறப்பு பட்டிமன்றம் காட்டூர் இந்தியன் பேங்க் அருகில் உள்ள டர்ப் மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு திருவெறும்பூர் மண்டல தலைவர்,மாநகர செயலாளர் மு.மதிவாணன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சிக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாவட்ட செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர்
கு.செல்வப்பெருந்தகை பட்டிமன்றத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
உதயநிதி ஸ்டாலினின் வெற்றிக்குப் பெறும் துணை நிற்பது
கட்சிப் பணியே
அரசுப்பணியே என்ற தலைப்புகளில் . நடைபெற்ற
பட்டிமன்ற நடுவர் கழக கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் .லியோனி.
இனியவன் ,கடலூர் தணிகைவேலன், பேரா.விஜயக்குமார்,மற்றும் நாகநந்தினி ஆகியோர் இரு அணியிலும் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் சல்மா,சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்,தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகரன்,.சபியுல்ல,

பொதுக்குழு உறுப்பினரும், கவுன்சிலருமான KKK கார்த்தி,

மாநில அணி நிர்வாகி செந்தில்,பகுதி செயலாளர் நீலமேகம், மாநகர நிர்வாகிகள் நூர்கான் தமிழ்செல்வம் சந்திரமோகன்
பொன் செல்லையா சரோஜினி மற்றும் மாவட்ட மாநகர ஒன்றிய பகுதி நகர பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இந்த சிறப்பு பட்டிமன்றத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரையாற்றியதாவது:-
நடைபெற்று கொண்டிருக்கக் கூடிய தமிழக துணை முதல்வரின் 48 வது பிறந்தநாள் நிகழ்ச்சியாக இந்த சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சி நடைபெற்று வருவதாகவும் திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பில் 48 நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக முடிவு செய்யப்பட்டு நிறைவு நிகழ்வாக இந்த சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்று வருவதாகவும் இந்த சிறப்பு பட்டிமன்றத்திற்கு வருகை புரிந்திருக்க கூடிய தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் எனது அண்ணன் செல்வப் பெருந்தகை
அவர்களை நான் வரவேற்பதாகவும் அவர் செல்வத்தில் பெருந்தையாக இருக்கிறாரா என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் மனதிலும் குணத்திலும் பெருந்தையாக திகழ்ந்து வருகிறார் என்றும் 120 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் ஒருவர் நமது துணை முதல்வர் வாழ்த்துகிறார் என்றால் அது நமக்கான பெருமையாக நான் கருதுவதாகவும் எடுத்துரைத்தார். மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டில் நாம் ஆட்சிக்கு வந்த பொழுது இக்கட்டான சூழ்நிலையில் இருந்த தமிழகத்தை தற்பொழுது தனது ஆட்சி நிர்வாக திறமையால் இரட்டை இலக்க பொருளாதாரத்தை உயர்த்தி உள்ளார் தமிழக முதல்வர் .
ஆனால் நமது தமிழக முதல்வர் அவர்களின் சிறப்பான ஆட்சித் திறமையால் கல்வியில் இந்த மூன்று ஆண்டுகளில் கல்வியில் சிறந்தது தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்துள்ளதாகவும் எனவே இதற்கு முதல்வரின் கரங்களை வலுப்படுத்த கூடியவராக இருக்கக்கூடிய துணை முதல்வரின் பிறந்த நாளை தான் இன்று நாம் கொண்டாடி வருகிறோம் என்றும் மேலும் தமிழகத்தின் முத்தான திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 202425-ல் எந்த ஆண்டும் இல்லாதவரை தற்பொழுது 57 பேர் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வில் தேர்வாகியுள்ளதாகவும் இதை பார்த்து தான் ஒன்றிய அரசு நம்மை பார்த்து வாழ்த்துவது மட்டுமல்லாமல், பயப்படுவதாகவும், எடுத்துரைத்தார்.
மேலும் தேர்தலுக்கு இன்னும் 60 நாட்கள் தான் உள்ளதாகவும் எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழக முதல்வர் அரியணையில் ஏற்றுவதற்கு அயராது பாடுபட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

கடந்த 2021 இல் இருந்து தற்போது வரை இந்த 55 மாதங்களில் நமது திருவரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்மலை , காட்டூர் திருவெறும்பூர் அரியமங்கலம் பாலக்கரை பகுதிகள் மற்றும் திருவரம்பூர் வடக்கு ஒன்றியம் மற்றும் தெற்கு ஒன்றியம் துவாக்குடி நகராட்சி கூத்தபபர் பேரூராட்சி என ரூ.383 .12 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து உள்ளதாகவும், மேலும் இதை சுருக்கமாக கூறினால் மாதத்திற்கு 7 கோடி ரூபாய் பணிகள் ஒவ்வொரு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எடுத்துரைத்தார்.

