திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 15 அடி உயர மாடியில்கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் தவறி விழுந்து சாவு
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 15 அடி உயர மாடியில்கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் தவறி விழுந்து சாவு
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 53) இவர் கடந்த 25 ந்தேதி தனது வீட்டின் மாடியில் 15 அடி உயரத்தில் கட்டுமான பணிகளை செய்து கொண்டிருந்தார்.
அப்பொழுது திடீரென்று மாடியிலிருந்து நிலை தடுமாறி தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து சீனிவாசன் ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

