திருச்சியில் 3வது பெடரேஷன் கப் கோல் ஷாட் பால் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கியது.
திருச்சியில் 3-வது ஃபெடரேஷன் கோல் ஷாட் பால் தேசிய சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம். இந்திய கோல் ஷாட் பால் சங்கம் மற்றும் தமிழ்நாடு கோல் ஷாட் பால் சங்கத்தின் இணைப்பில், திருச்சி மற்றும் விருதுநகர் மாவட்ட கோல் ஷாட் பால் சங்கங்கள் சார்பில் நடத்தப்படும் 3-வது ஃபெடரேஷன் கோல் ஷாட் பால் தேசிய சாம்பியன்ஷிப் (மூத்த ஆண்கள் மற்றும் பெண்கள்) போட்டியின் தொடக்க விழா இன்று திருச்சி மணிகண்டம் இந்திரா கணேசன் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. 
இந்த விழாவில் எஸ்.பி. அண்ணாமலை (தலைவர் – TDGSBA), டாக்டர் ஜி. பாலகிருஷ்ணன் (தலைவர் – TDGSBA) அவர்களின் முன்னிலையில் இந்திய கோல் ஷாட் பால் சங்க நிறுவனர் சர்வதேச கோல் ஷாட் பால் பெடரேஷன் தலைவர், பொது செயலாளர் கோல் ஷாட் பால் அசோசியன் இந்தியா நோட்லா ராஜேந்திர பிரசாத் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் பொருளாளர் ராம்பிரவேஷ் குமார், ஹர்மன்ஜீத் சிங், சண்முகநாதன்
துணைத் தலைவர் – GSBATN
இயக்குநர் – ஸ்ரீ காளீஸ்வரி குழும நிறுவனங்கள், சிவகாசி,
பி. தமிழ்வாணன் துணைத் தலைவர் – GSBATN செயலாளர் (Correspondent) – லிட்டில் பிளவர் மெட்ரிக். உயர்நிலைப் பள்ளி, பெரம்பலூர் மாவட்டம்,
AKS டாக்டர் கே. ஸ்ரீநிவாசன்
ஆலோசகர் கண் மருத்துவ நிறுவனம் ஜோசப் கண் மருத்துவமனை.
தலைவர் ஆலோசனைக் குழு
கோல் ஷாட் பால் சங்கம், தமிழ்நாடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கௌரவ விருந்தினர்களாக
ந. சிவராமகிருஷ்ணன் – துணைத் தலைவர், GSBATN, அ. ஸ்டான்லி வினோத் – துணைத் தலைவர், GSBATN, சிவ்பகத் – துணைத் தலைவர், TDGSBA, பி. விக்னேஸ்வரன் – துணைத் தலைவர், GSBATN, க. ஜெயச்சந்திரன் – துணைத் தலைவர், GSBATN, அ. பவானி – துணைத் தலைவர், GSBATN, ஹெச். எஸ். நித்யா ராஜா – துணைத் தலைவர், GSBATN ஆகியோர் கலந்து கொண்டனர்.

போட்டியின் முடிவில்
முதல் இடத்திற்கான கோப்பையை திருச்சி இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள்,
இரண்டாம் இடத்திற்கான கோப்பையை சிவகாசியைச் சேர்ந்த ஸ்ரீ காளீஸ்வரி குழும நிறுவனங்களும்,
மூன்றாம் இடத்திற்கான கோப்பையை பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளத்தைச் சேர்ந்த லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும் வழங்குகின்றன.
போட்டிகள் இன்று தொடங்கி நாளை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு தினங்களுக்கு நடைபெறுகிறது.
வரும் ஞாயிற்றுக்கிழமை 28ஆம் தேதி அன்று காலை இறுதிப் போட்டி நடைபெற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.

