Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அரஸ்ட் வாரண்ட் வந்துள்ளது என பொய் கூறி ரூ.10 லஞ்சம் வாங்கிய ஏட்டுக்கு ஆறாண்டு சிறை.புகார் அளித்தவர் இறந்து 6 வருடத்துக்குப் பின் தீர்ப்பு.

0

'- Advertisement -

அரெஸ்ட் பாராட்டு வந்துள்ளது எனக் கூறி ரூ.10, ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழல் வழக்கில்  திருச்சி போலீஸ் ஏட்டுக்கு 2 மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை-

திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் அதிரடி  தீர்ப்பு.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் நவல்பட்டு ரோட்டில் தனியார் பைனான்ஸ் நிதி நிறுவனத்தை நடத்தி வரும், திருவெறும்பூர் தாலுகா காந்திநகர் 8வது தெருவைச் சேர்ந்த முருகையா என்பவரின் மகன் குணசேகரன் (இறப்பு 14.02.2019) என்பவரிடம், கடந்த 12.06.2009 அன்று பாய்லர் பிளாண்ட் காவல் நிலைய தலைமைக்காவலர் ராமசாமி என்பவர், புகார்தாரரிடம் உன்மேல் டெல்லியில் இருந்து அரஸ்ட் வாரண்ட் வந்திருக்கு என்று பொய்யாக கூறி கைது செய்யாமல் இருக்க ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். அதற்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத குணசேகரன் கடந்த 13.06.2009 அன்று திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சூரக்குமரன்யிடம் புகார் கொடுத்துள்ளார்.

அந்த மனுவின் மீது காவல் ஆய்வாளர் சூரக்குமரன் வழக்கு பதிவு செய்து பொறிவைப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது புகார்தாரர் குணசேகரணிடமிருந்து பாய்லர் பிளாண்ட் காவல் நிலைய தலைமைக்காவலர் ராமசாமி லஞ்சப்பணம் ரூ.10 ஆயிரம் கேட்டு பெற்ற போது கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் விசாரணை முடித்து இன்று போலீஸ் ஏட்டு ராமசாமி, என்பவருக்கு, ஊழல் தடுப்பு சட்டப்பிரிவு 7-ன் படி 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2000/-ம் அபராதம், அபராதத்தை செலுத்த தவறினால் 3 மாத சிறை தண்டனையும் மற்றும் 19 (1) d பிரிவில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2000/-ம் அபராதம், அபராதத்தை செலுத்த தவறினால் 3 மாத சிறை தண்டனையும், தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்குமாறும், திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற சிறப்பு நிதீபதி புவியரசு தீர்ப்பு வழங்கினார்கள்.

இவ்வழக்கில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் உதவி ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர்கள் சாட்சிகளை ஆஜர் செய்தும், அரசு சிறப்பு வழக்குரைஞர் கோபிகண்ணன் ஆஜராகி தண்டணை பெற்று தர உதவி செய்தனர்.

லஞ்ச புகார் கொடுத்த நபர் கடந்த 2019ம் ஆண்டு பிப் 14ந்தேதி இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.