திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம் . தலைமை நீதிபதி பங்கேற்பு.
திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு கொண்டாட்டம் .
தலைமை நீதிபதி எம். கிறிஸ்டோபர் பங்கேற்பு.
திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா குற்றவியல் வழக்கறிஞர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் முல்லை சுரேஷ் தலைமை தாங்கினார். விழாவுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி எம். கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார்.
செயலாளர் பி.வி. வெங்கட் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார். 
மேலும் நீதிபதிகள் அனு சுருதி, பரம்வீர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
விழாவில் வழக்கறிஞர்கள் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி பரிமாறி மகிழ்ந்தனர்.
மூத்த வழக்கறிஞர் ஸ்டேனிஸ்லாஸ், வழக்கறிஞர்கள் ஜேசுபால்ராஜ், கிறிஸ்டோபர் சத்யராஜ், விக்கிரமாதித்தன் , நாகராஜன், சிவராஜ் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். 
சங்கத்தின் துணைத் தலைவர் சசிகுமார்,பிரபு இணைச் செயலாளர் விஜய் நாகராஜன் , செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன்,எழிலரசி,
ரங்கீலா, அருண் சித்தார்த், விஜி, பிரியா, ஜானி, கம்பன், அர்ஜுன் மற்றும் 300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
பி. வி. வெங்கட் செய்திருந்தார்.

